உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

செம்பியன்மாதேவித்

தலவரலாறு

1

197

இருப்பிடம் :

செம்பியன் மாதேவி என்பது தஞ்சாவூர் ஜில்லா நாகப் பட்டினம் தாலுகாவிலுள்ள ஒரு சிவத்தலமாகும். திருவாரூரி லிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் இருப்புப் பாதையில் கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே இரண்டு மைல் சென்று, தேவூர் என்ற பாடல் பெற்ற சிவத்தலத்தை அடைந்து அவ்வூரிலிருந்து தென் கிழக்கே போகும் பெரு வழியில் நான்கு மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். இத்தலத்திற்குத் தெற்கே ஐந்து மைலில் குண்டையூரும், ஆறு மைலில் திருக்குவளை என்று வழங்கும் திருக்கோளிலி என்ற பாடல் பெற்ற தலமும், எட்டு மைலில் திருப்புகழ் பெற்ற எட்டுக்குடி என்ற தலமும், தென்மேற்கே ஆறு மைலில் வலிவலம் என்ற பாடல் பெற்ற தலமும், மேற்கே நான்கு மைலில் ருவிசைப்பா பெற்ற சாட்டியக்குடி என்ற தலமும், ஐந்து மைலில் கன்றாப்பூர் என்ற பாடல் பெற்ற தலமும், வடக்கே ஆறுமைலில் சிக்கல் என்ற பாடல் பெற்ற தலமும், வடகிழக்கே எட்டு மைலில் நாகைக்காரோணம் என்ற பாடல் பெற்ற தலமும் இருக்கின்றன.

திருக்கோயில் :

இவ்வூரிலுள்ள கோயில் ‘ஸ்ரீ கயிலாசம்' என்ற பெயருடையது; இக்காலத்தில் கயிலாசநாத சுவாமி கோயில் என்று வழங்குகின்றது. இது கிழக்கு நோக்கிய திருவாயிலையுடையது; கீழ் மேல் 298 அடி நீளமும் தென்வடல் 267 அடி அகலமும் உடையது.