உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

முதல் 985 வரையில் அரசாண்டவர். அவரது ஆட்சிக் காலத்தில் தான் இவ்வூரும் திருக்கோயிலும் செம்பியன் மாதேவியாரால் அமைக்கப்பெற்றன என்று தெரிகிறது. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களுள் உத்தம சோழரது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டாகிய கி.பி. 981-ல் வரையப் பெற்ற கல்வெட்டே மிக்க பழமை வாய்ந்ததாகும். எனவே, இக்கோயில் கி.பி.981 ஆண்டிற்கு முன்னர்க் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இனி, உத்தம சோழர் காலமுதல் ஒவ்வோர் அரசரது ஆட்சிக் காலத்தும் நிகழ்ந்தவற்றைக் காண் போம்.

1. உத்தம சோழர் காலம் : கி.பி. (970-985)

இவ்வேந்தர் காலத்துக் கல்வெட்டுக்கள் எட்டு உள்ளன அவற்றுள் ஒன்று, இம்மன்னர் பெருமானுடைய மனைவி மாருள், பட்டன் தானதுங்கியார், மழபாடித் தென்னவன் மாதேவியார், இருங்கோளார் மகளார் வானவன்மாதேவியார், விழுப்பரையர் மகளார் கிழானடிகள், பழுவேட்டரையர் மகளார் என்ற ஐவரும், தம்மாமியார் செம்பியன்மாதேவியார் பிறந்த நாளாகிய சித்திரைத் திங்கள் கேட்டை நாளில் திருக்கயிலாசமுடைய மகாதேவர்க்கு ஆண்டுதோறும் சிறப்பு வழி பாடும் விழாவும் நடத்துவதற்கு முதற்பொருள் கி.பி. 981-ம் ஆண்டில் வழங்கியதை உணர்த்துகின்றது.'

கி.பி 984-ல் உத்தம சோழருடைய பட்டத்தரசியார் திரிபுவனமாதேவியார் என்பார், திருக்கயிலாசமுடையார்க்கு நாள் வழிபாட்டிற்கு அளித்த இறையிலி நிலங்களையும் திங்கள் தோறும் முதல்நாளில் கோயிலில் நிகழவேண்டிய சிறப்பு வழிபாட்டிற்குரிய பொருள்களையும் அவ்வழி பாட்டிற்கு அவ்வரசியார் அளித்த நிபந்தத்தையும் இரு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.2

கி.பி. 984-ல் உத்தம சோழருடைய மனைவியருள் பட்டன் தான துங்கியாரும் பஞ்சவன் மாதேவியாரும் திருக்கயிலாச

1. Annual Report on South Indina Epigraphy for the year 1925 - 26, Inscription No. 494 of 1925.

2. Ins. Nos. 485 and 488 of 1925.