உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

முடைய மகாதேவர்க்கு முறையே நெற்றிப் பொற்பட்டமும் பொன்னால் அமைந்த கைப்பிடியுடைய வெண்சாமரையும் அளித்தமையை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன.'

1

கி.பி 984ல் சொன்னமாதேவியார் என்ற கண்ணப்பரசியார் என்பார், சித்திரைக் கேட்டை நாளில் கோயிலில் நடைபெறும் செம்பியன் மாதேவியாரின் பிறந்தநாள் விழாவிற்கு 507/2 கழஞ்சு பொன் அளித்ததையும், தொண்டை மண்டலத்துப் பங்கள் நாட்டினர் ஒருவர் விழாவில் ஆண்டுதோறும் அடியார் களுக்கு உணவளித் தற் பொருட்டு 150 பொன் முதற் பொருளாகக் கொடுத்துள்ள தையும் இரு கல்வெட்டுக்கள் தெரிவிக் கின்றன. முதல் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற சொன்ன மாதேவியார் உத்தம சோழரின் மனைவிமாருள் ஒருவரா யிருத்தல் வேண்டும்.

2

கி.பி.985-ல் பட்டத்தரசியார் திரிபுவனமாதேவியார் ஆண்டுதோறும் சித்திரைக் கேட்டையில் கோயிலில் நிகழும் தம் மாமியாரின் பிறந்தநாள் விழாவிற்குப் பொருள் வழங்கி யதையும், அவ்வாண்டிலேயே உத்தம சோழருடைய மற்றொரு மனைவியார் ஆரூரன் அம்பலத்தடிகளார் என்பார், அவ்விழா விற்கு 590 கழஞ்சு பொன் அளித்ததையும் ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.3

2. முதல்

ராசராச சோழர் காலம் : (கி.பி. 985-1014)

உத்தம சோழர்க்குப் பின்னர் அரசாண்ட முதல் இராசராச சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் நான்குள்ளன. அவற்றுள், கி.பி. 987-ல் வரையப்பெற்ற கல்வெட்டு, செம்பியன் மாதேவியார் திருக்கயிலாச முடைய மகாதேவர்க்கு வழங்கிய நெற்றிப் பட்டம், பொற்பூக்கள், பொற்கலசம் முதலானவற்றையும் அவற்றின் நிறையையும் அறிவிக்கின்றது.4

1. Ins. Nos. 490 and 491 of 1925.

2. Ins. Nos. 492 and 489 of 1925.

3. No. 496 of 1925

4. 497 of 1925.