உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

205

கி.பி.990-ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று சிதைந்த நிலையில் உள்ளது. அது, செம்பியன்மாதேவிச் சதுர்வேதிமங் கலத்துக் கிராம சபையார் தம் செயற்குழுவினரான ஊர்வாரியப் பெருமக்களுக்கு அனுப்பிய ஓர் உத்தரவின் படியாகத் தோன்று கிறது.1 அரசாங்க உத்தரவுகள், கிராமசபையாரின் முடிபுகள் ஆகிய இவற்றுள் இன்றியமையாதனவாய் என்றும் வைத்திருத்தற் குரியவற்றைக் கோயில் கருங்கற்சுவர்களில் யாவரும் பார்க்கக் கூடிய வெளிச்சமுள்ள இடங்களில் பொறித்துவைப்பது அக்கால வழக்கமாகும். அத்தகைய கல்வெட்டுக்கள் பல கோயில் களில் இருத்தலை இக்காலத்தும் காணலாம்.

கி.பி. 990-ல் திருக்கயிலாசமுடையார் கோயில் நிலங்கள் சிலவற்றிற்குக் கிராம சபையார் வரி நீக்கியதை ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.'

கி.பி. 992-ல் உத்தம சோழரின் பட்டத்தரசியார் திரிபுவன மாதேவியார் சித்திரைக் கேட்டையில் கோயிலில் நடத்தப் பெறும் தம் மாமியாரின் பிறந்தநாள் விழாவிற்கு முதல் பொருளாக நூறு பொற்காசு அளித்ததை ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. 3. முதல் இராசேந்திர சோழர் காலம் : (கி.பி. 1012-1044)

3

முதல் இராசராச சோழர்க்குப் பிறகு ஆட்சிபுரிந்த முதல் இராசேந்திர சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் நான்கு உள்ளன. அவற்றுள், ஒரு கல்வெட்டு, நந்தவனத்தின் பாதுகாப்பிற்குக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குக் கிராம சபையார் வரிதள்ளி யதையும், முதல் இராசேந்திர சோழர், கி.பி. 1019-ல் டபவாகன தேவரையும்,

செம்பியன்மாதேவியாரையும், கோயிலில் எழுந்தரு ளுவித்த செய்தியையும், அவர்களின் நாள் வழிபாட்டிற்கு அளிக்கப்பெற்ற நிலங்களுக்குக் கிராம சபையார் வரி நீக்கியதையும் தெரிவிக்கின்றது.4

1. 495 of 1925.

2. 493 of 1925.

3. 480 0f 1925

4. 481 0f 1925