உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

மற்றொரு கல்வெட்டு, கிராம சபையார் கோயிலிலுள்ள செம்பியன்மாதேவியார் பெரிய மண்டபத்தில் கூட்டம் நடத்தித் தம் ஊர்க்கு மேற்பிடாகையாயுள்ள மோகனூர் ஆதித்தேசுர முடையமகாதேவர் தேவதான நிலங்களிலிருந்து கிடைத்துவரும் 'வெள்ளான் வெட்டி' என்ற வரிப்பொருளைக் கொண்டு அக்கோயிலில் நாள் தோறும் சந்திவிளக்கு ஏற்றிவர வேண்டு மென்று செய்த ஒருமுடிபினை உணர்த்து கின்றது. இது வேறொரு கோயிலைப் பற்றிய கல்வெட்டாகும்.

கி.பி. 1035-ல் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள்’ சுவரால் மறைக்கப்பட்டு முதல் இராசேந்திர சோழரின் மெய்க்கீர்த்தியோடும் நாட்டின் பெயரோடும் நின்றுவிட்ட மையால், அவற்றில் கோயிலைப் பற்றிய செய்திகள் ஒன்று மில்லை.

4. முதல் இராசாதிராச சோழர் காலம் : (கி.பி. 1044-1054)

முதல் இராசேந்திர சோழர்க்குப் பின்னர் அரசாண்ட முதல் இராசாதிராச சோழர் காலத்துக் கல்வெட்டொன்றால் திருவேழிருக்கை மகாதேவர் கோயில் நிலங்கள் சிலவற்றிற்கு அரசர்பெருமான் வரி தள்ளிய செய்தி அறியப்படுகின்றது. திருஏழிருக்கை என்பது திருச்சாட்டியக்குடியிலுள்ள திருக் கோயிலின் பெயர். கருவூர்த் தேவர் பாடிய திருச்சாட்டியக்குடி திருவிசைப்பாப் பதிகம் முழுதும் "சாட்டியக்குடியார்.... ஏழிருக்கையிலிருந்த ஈசனுக்கே" என வருதல் காண்க.

5. மூன்றாம் இராசராச சோழர் காலம் : (கி.பி. 1216-1256)

மூன்றாம் குலோத்துங்க சோழரின் புதல்வர் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் கி.பி. 1233-ல் வரையப் பட்ட கல்வெட்டொன்று, சண்டேசுவர நாயனார் கோயிலில் உள்ளது.4 இதில் கிராம சபையார், கிராம காரியங்களைப் பார்ப்பதற்குப்

1. 483 0f 1925

2. Nos.486 and 487 of 1925

3. 484 of 1925

4. 500 of 1925..

1