உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

207

பகலிலேயே தம் கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும், இரவில் நடத்தக் கூடாதென்றும், முன்னர் உறுப்பினராக இருந்தவர்களை ஐந்து ஆண்டுகள் வரையில் மீண்டும் தேர்ந் தெடுக்கக் கூடாதென்றும் செய்த முடிபுகள் காணப்படுகின்றன. 6. சடையவர்மர் வீரபாண்டியர் காலம் : (கி.பி. 1258-1268)

சடையவர்மர் சுந்தர பாண்டியர் சோழ மண்டலத்தைக் கைப்பற்றித் தம் ஆட்சிக்கு உட்படுத்திய காலத்தில் அங்குப் பிரதிநிதியாயிருந்து அரசாண்ட வீரபாண்டியர் நாளில் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை, பெரிய நாட்டார் உத்தமவேதப் பெருமாள் என்ற கல் தச்சனைக் கொண்டு கோயிலைப் புதுப்பித்ததையும், தம் தம் கிராமங்களில் வேலி ஒன்றுக்குக் கல நெல் வீதம் கோயிலுக்குக் கொடுத்து வர ஏற்பாடு செய்ததையும், திருப்பணியை நிறைவேற்றிய அக்கல் தச்சனுக்குக் கோயில் அதிகாரிகள் கி.பி.1262-ல் எல்லா உரிமைகளோடும் ஒரு வீடு அளித்ததையும் கூறுகின்றன.

7. அரசரின் பெயரும் ஆண்டும் காணமுடியாத மூன்று கல்வெட்டுக்கள் :

சுவரால் மறைக்கப் பெற்ற அக் கல்வெட்டுக்களுள் ஒன்று, திருக்கயிலாசமுடைய மகாதேவர்க்குத் திங்கள் தோறும் முதல் நாளில் சிறப்பு அபிடேகம் நிகழ்த்துவதற்கும் நுந்தா விளக்கு வைப்பதற்கும் உத்தராயண தட்சிணாயன நாட்களில் கோயிலில் நூறு அந்தணர்களை உண்பித்தற்கும் செம்பியன்மாதேவியார் நிலம் வழங்கியதை உணர்த்துகின்றது.'

மற்றொரு கல்வெட்டு, சித்திரைக் கேட்டையில் கோயிலில் நடைபெறும் விழாவிற்கு அருமொழி அரிஞ்சிகைப் பிராட்டியாரும் குந்தவையாரும் 220 கழஞ்சு பொன் அளித்ததை அறிவிக்கின்றது.3 குந்தவையார் முதல் இராசராச சோழரின் தமக்கையார் ஆவர்.

1. Nos. 499 and 501 of 1925

2. 479 of 1925.

3. 482 of 1925.