உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

பிறிதொரு கல்வெட்டு, கோயிலுக்கு வழங்கப்பெற்றுள்ள அணிகலன்கள் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது.'

செம்பியன்மாதேவிக்

கோயிலிலுள்ள கல்வெட்டுக்களில் ஒன்று.

(கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்திலுள்ளது.)

(1) ஸ்வஸ்தி ஸ்ரீ கோ (2 இராஜகேசரிபந்ம (3) ற்கு யாண்டு ஆவது (4) தென்கரை அளநா (5)ட்டு பிரம தேயம் ஸ்ரீ (6) செம்பியன்மாதேவிச் (7) சதுர்வேதிமங்கலத்து (8) ஸ்ரீ கைலாசமுடையமகா (9) தேவற்கு ஸ்ரீ உத்தமசோழ (10) தேவர் தங்களாச்சி ஸ்ரீ பிராந்த (11) கன் மாதேவடிகளாரான ஸ்ரீ செம் (12) பியன்மா தேவியார் இவ்வாண்டு மீ (13) ன நாயிற்றுக்குடுத்தள பொன் க (14) லசம் ஒன்று இது இவ்வூர்க் கல்லால் (15) பொன்னூற்றுத் தொண்ணுற்றுக்கழ (16) ஞ்சு பொன்னின் பட்டம் இரண்டினால் (17) மேற்படி கல்லா(ல்) நிறை தொண்ணுற் (18) று கழஞ்சும் பொற்பூ ஒன்றுபொ (ன்) (19) (முக்) கழஞ்சே முக்காலாகப் பொற்பூமூ (20) (ன்றுக்கு) மேற்படி கல்லா(ல்) நிறைபதி (21) னொரு கழஞ்சேகாலும் பொற்பூ ஒன் (22)... முக்கழஞ்சே முக்காலேமஞ் (23) சாடியாகப்பொற்பூ இருபத்தொன்றி (24) னால் மேற்படி கல்லால் நிறை எழுபத்தொ (25) ன்பதின் கழஞ்சே முக்காலே மஞ்சா (26) டியும் பொற்பூ.....(27) ழஞ்சே முக்கால் இரண்டு மஞ்சாடியாக (28) பொற் பூ இரண்டினால் மேற்படி கல் (29) லானிறை ஐங்கழஞ் சரையே நாலு (30) மஞ்சாடியும் ஆக இவை இத்த (31) னையும் பன்மாகேஸ்வர ரக்ஷை (32) 11உ

1. 498 of 1925.

(No. 497 of 1925) - South Indian Inscriptions Vol. XIII. No. 72