உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

209

3

செம்பியன்மாதேவியார் வரலாறு

செம்பியன்மாதேவி என்ற இந்த ஊரையும் இதிலுள்ள திருக்கோயிலாகிய ஸ்ரீ கயிலாசத்தையும் அமைத்த செம்பியன் மாதேவியார், சேரமன்னர்களுள் ஒரு கிளையினரான மழவர் பெருங்குடியில் பிறந்தவர்; சோழச் சக்கரவர்த்தியாகிய முதற் பராந்தக சோழரின் (கி.பி. 907-953) இரண்டாம் புதல்வரும், சிவபத்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற சிவஞானச் செல்வரும் ஆகிய முதற்கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியாராக விளங்கியவர்; உத்தம சோழரை (கி.பி. 970- 985) த்தம் திருமகனாராகப் பெற்றவர்; தம் கணவரைப் போல எல்லையற்ற சிவபத்தியுடையவர்; அறிஞர்களால் மாதேவடி களார் என்று பாராட்டப்பட்டவர். இவற்றை,

66

மழவரையர் மகளார் ஸ்ரீ கண்டராதித்த பெருமாள் தேவியார் ஸ்ரீ செம்பியன்மாதேவியார்' எனவும், ‘ஸ்ரீ உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன்மாதேவிப் பிராட்டியார்' எனவும் காணப்படும் கல்வெட்டுத் தொடர்களாலும்,

கோராச கேசரிவர்மர்க்கு யாண்டு மூன்றாவதனிற் பேராளர் வெண்காடர் தங்கோயில் மேலொரு

பைம்பொற்குடம்

ஓராயிரத் தொடைஞ்ஞூற்றுக் கழஞ்சினால் வைத்துகந்தாள் சீரார் மழவர்கோன் பெற்றநம் செம்பியன் மாதேவியே”

(S.I.I.Vol.XIII No. 144)

என்ற கல்வெட்டுப் பாடலாலும் நன்கு அறியலாம்.

இவ்வரசியார் முதலில் செய்த அறம், தம் மாமனார் முதற்