உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

213

செம்பியன்மாதேவிக் கோயிலில் செம்பியன் மாதேவிப் பெரு மண்டபம் அமைக்கப்பட்டிருத்தல் போல் செங்கற்பட்டு ஜில்லா திருமுக்கூடல் வேங்கடேசப் பெருமாள் கோயிலிலும் இவ்வரசியாரை நினைவு கூர்தல் காரணமாகச் செம்பியன் மாதேவிப் பெரு மண்டபம் என்ற மண்டபம் ஒன்று முதல் இராசராச சோழரால் கட்டப் பெற்றுள்ளது. அப்பெரு மண்டபம், ஊர்ச் சபையார் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றப் பயன்பட்டு வந்தது என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. திருச்சிராப் பள்ளி ஜில்லாவிலுள்ள திரு மழபாடிக் கண்மையில் செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற ஏரி ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தமை ஒரு கல்வெட்டால் தெரிகின்றது. அச்செயல்கள் முதல் இராசராச சோழர், முதல் இராசேந்திர சோழர் முதலான பேரரசர்கள் இவ்வரசி யாரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர் என்பதை நன்கு புலப்படுத்துவனவாகும்.

அவ்வரசர் பெருமான்கள் சிவபத்தி, சமயப் பொறை முதலான உயர் குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்றுச் சமயத் தொண்டுகள் பல புரிந்து, ஒப்புயர்வற்ற பெரு வேந்தர் களாக விளங்கியமைக்குக் காரணம் இவ்வரசியாரால்

ளமையில் வளர்க்கப் பெற்றமையே என்பது உணரற்பாலது. அறப் பெருஞ் செல்வியராகிய இவ் வரசியாரது புகழ் நம் தமிழகத்தில் என்றும் நின்று நிலவுவதாக.