உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

‘கல்கி'யில் வந்த கடிதம்

215

பொன்னி எனப்படும் காவிரி நதியின் புனலால் செந்நெல் வளம் கொழிக்கும் பாக்கியம் பெற்றது சோழநாடு. அவ் வளநாட்டிலே "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றி மூத்தகுடி”யாகவும், படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வரும் பழங் குடியினராகவும் போற்றப்படும் சோழ அரசர்களால் கட்டுவிக்கப்பட்ட பெருங் கோயில்கள் பற்பல.

சிவ பக்தியிற் சிறந்த செம்பியன்மாதேவியார் தன் பக்தியின் சின்னமாக நாகையை அடுத்த ஓர் சிற்றூரை விலைக்கு வாங்கி ஸ்ரீ கைலாச நாதருக்கு ஒரு கோயில் எடுப்பித்து அவ்வூருக்கும், கோயிலுக்கும் செம்பியன் மாதேவி என்ற பெயரைச் சூட்டினர் என்பது தென் இந்திய அரசாங்கக் கல்வெட்டு ஆராய்ச்சி இலாக்காவினரின் 1925-26 ஆம் ஆண்டு அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது.

இத் தலம் நாகைக்குத் தென் மேற்கில் சுமார் எட்டு கல் தொலைவில் அமைந்துள்ளது. கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்தி லிருந்து சுமார் ஆறு கல் தொலைவிலும், தேவூர் என்ற பதியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் மூன்று கல் தொலைவிலும் உள்ளது.

இத் திருக்கோயில் மிக மிகத் தொன்மையான முறையில் காட்சியளிக்கிறது. கோயிலின் இராசகோபுரம் ஓர் அடுக்கு மட்டும் கட்டப்பட்டுப் பூர்த்தி செய்யப் படாத நிலையில் விடுப்பட்டுள்ளது. முதல் பிரகாரத்தில் சுப்பிரமணியர், அம்பிகை கோயில்கள் கிழக்கு முகமாக அமைந்துள்ளன.

இரண்டாவது கோபுரம் மூன்று அடுக்குக் கொண்ட தாய்ப் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது. கர்ப்பகிரகத்துக்குப் பின்புறமாக கோஷ்டத்தில் மகாவிஷ்ணு உருவம் அமைக்கப் பெற்றுள்ளது. இத்தலத்திற்கருகில் சோழ வித்தியாபுரம் என்ற புகழ் பெற்ற ஊர் அமைந்துள்ளது.

இந்தச் சரித்திரப் பிரசித்திப் பெற்ற கோயிலுக்குப் பற்பல நிவந்தங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. குந்தவையும் முதலாம்