உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

இராச ராசனுடைய மனைவியும், செம்பியன்மாதேவியின் திரு நட்சத்திரமாகிய சித்திரை கேட்டையில் ஸ்ரீ கைலாசநாதருக்கு நிவேதனம் செய்யப் பல நிவந்தங்களை ஏற்படுத்தியுள்ளனர். உத்தம சோழர் ஆட்சியில் அன்னாரது மனைவியாராகிய திரிபுவன மாதேவியாரால் தன் மாமியார் செம்பியன் மாதேவியின் திரு நட்சத்திரத்தில் ஸ்ரீகைலாசநாதருக்கு நிவேதனம் செய்யப்பல நிவந்தங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

மேலும், ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி பாண்டியர் காலம் வரையில் இக்கோயிலுக்கும் ஏற்படுத்தப் பட்டிருக்கிற பல நிவந்தங்கள் பற்றித் தென் இந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சி

லாக்காவினரின் 1925-26 ஆம் ஆண்டு அறிக்கையில் 479-501 வரை உள்ள 22 கல்வெட்டுகளைப் படி எடுத்துள்ளார்கள். இக்கோயில் செம்பியன்மாதேவியார் காலத்தில் கட்டப்பட்ட தாகத் தெரிகிறபடியால் இது கி.பி. 985 ஆம் ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இராஜ ராஜன் (கி.பி. 985-1012) இராஜேந்திரன் முதலியவர்களால் தொடர்ந்து கட்டப் பட்டிருத்தல் வேண்டும். இராஜேந்திரன் காலத்திய கல்வெட்டு ஒன்றில் இடபவாகன தேவருக்கும் செம்பியன் மாதேவி உள்ளிட் வேறு சில விக்கிரங்களுக்கும் நிவேதனத்துக்கு விடப்பட்ட நிலங்களின் வரியை கிராமப் பெருமக்கள் சபை தள்ளுபடி செய்து விட்டதாகத் தெரிய வருகிறது.

இதைப் பார்க்க, செம்பியன் மாதேவியாருக்கு உருவச்சிலை இருப்பதாகக் தெரிகிறது. அது இப்பொழுது கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் பக்த முறையில் காட்சியளிக்கும் நல்லம்மை என்ற உருவமாக இருத்தல் வேண்டும்.

கோயிலுக்குச் சொந்தமாகச் சுமார் 250 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அரசர்களால் இனாமாக அளிக்கப்பட்ட இனாம் நிலங்களில் சுமார் நாற்பது ஏக்கர் இனாம் ஒழிப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

செம்பியன்மாதேவி,

என். கோவிந்தசாமி,

27-3-54.

நிர்வாக அதிகாரி.