உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 தலைவர்களாகிய இலாங்காபுரித் தண்டநாயகனும் சகத்விசய தண்டநாயகனும் வெற்றி எய்தினர். பகைஞர்களாகிய சிங்கள வரின் வெற்றி, அந்நாட்களில் சோழ மண்டலத்திலும் பிறநாடு களிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உண்டுபண்ணி விட்டது என்பது காஞ்சிமா நகரையடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியப்படுகிறது. எனினும், இருபடை கட்கும் பிறகு நடைபெற்ற போர்களில் இராசாதிராச சோழன் படைத்தலைவனாகிய திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வென்று புறங்காட்டி யோடும்படி செய்தமையோடு சிங்களப் படைத் தலைவர் இருவரையுங் கொன்று, அவர்கள் தலைகளை யாவரும் காணும் நிலையில் மதுரைக் கோட்டைவாயிலில் வைக்கும் படியும் செய்தனன். அதன் பின்னர் அச்சோழர் படைத் தலைவன் மதுரையம்பதியை இக்குலசேகர பாண்டியனுக்கு அளித்து, அங்கு வீற்றிருந்து பாண்டிநாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு ஏற்பாடு செய்தான். இவனது ஆட்சியும் சில ஆண்டுகள் வரையில் பாண்டி நாட்டில் அமைதியாக நடைபெற்று வந்தது எனலாம்.

2

சிங்கள மன்னன் பராக்கிரமபாகு என்பான், இப்பாண்டி வேந்தனையும் இவனுக்கு உதவிபுரிந்த சோழ அரசனையும் மறுபடியும் தாக்கிப் போர்புரிய முயன்றான். அம்முயற்சி பயன்படாமற் போகவே, அவன் மதுரையிலிருந்து அரசாண்ட குலசேகரனைப் பாண்டி வேந்தனாக ஏற்றுக்கொண்டு நண்ப னாக வைத்துக் கொள்வது நலமெனக்கருதி, இவனுக்குச் சில பரிசில்கள் அனுப்பினான். இப்பாண்டி மன்னன், இராசாதிராச சோழன் தனக்குச் செய்த உதவிகள் எல்லாவற்றையும் மறந்து, சிங்கள அரசன் அனுப்பிய பரிசில்களைப் பெற்றுக் கொண்டு அவனோடு நட்பும் மணத்தொடர்பும் கொள்ள உடன்பட்டு விட்டான். அன்றியும், இவன் சோழ இராச்சியத்திற்கு

4

1.S.I.I., Vol. VI, No. 456.

2. Ep. Ind.Vol. XXI, No. 31. (பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு)

3. இவ்வரலாறு யான் எழுதிய 'பிற்காலச் சோழர் சரித்திரம் இரண்டாம் பகுதியில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.'

4. Ep. Ind., Vol. XXII, No. 14. (வடதிருவாலங் காட்டுக்

கல்வெட்டு)