உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

77

தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களைக் கைப்பற்றி அவற்றை மழவச்சக்கரவர்த்தி ஆளும்படி வழங்கினான். இவ்வாறு பாண்டிநாட்டுத் தலைவர் சிலர்க்கு ஆட்சியுரிமை நல்கி அன்னோரை இலங்காபுரித்தண்ட நாயகன் தன் வயப்படுத்தி வைத்திருந்த காலத்தில் குலசேகரபாண்டியன் படை திரட்டிக் கொண்டு மறுபடியும் போர்க்குத் தயாராயினன். அந்நாட்களில் அத்தலைவர்களும் இப் பாண்டி வேந்தனோடு சேர்ந்து கொள்ளவே, எல்லோரும் சேர்ந்து வீரபாண்டியனைப் போரிற் புறங்கண்டு மதுரைமா நகரை விட்டோடும்படி செய்து விட்டனர். அந்நிகழ்ச்சிகளை யுணர்ந்த இலங்காபுரித் தண்ட நாயகன், ஈழநாட்டிலிருந்து தனக்குத் துணைப்படை அனுப்புமாறு பராக்கிரம பாகுவுக்கு ஒரு கடிதம் விடுத்தனன். அவ்வேந்தன் சகத்விசயதண்டநாயகன் தலைமையில் ஒரு பெரும்படை அனுப்பினான். சிங்களப் படைத்தலைவர் இருவரும் சேர்ந்து குலசேகர பாண்டியனைப் போரில் வென்று, தம் அரசன் ஆணையின்படி வீரபாண்டியனை மீண்டும் மதுரையில் அரியணையேற்றி முடிசூட்டு விழா நிகழ்த்தினர். மற்றுமொருறை சீவில்லிபுத்தூரில் நடைபெற்ற போரில் குலசேகரபாண்டியன் தோல்வி எய்தித் திருநெல்வேலிப் பக்கஞ்சென்று அங்குத் தங்கியிருந்தான்.

1

இவ்வாறு சிங்களவர்பால் பன்முறை தோல்வியுற்று இன்னலுக்குள்ளாகிய குலசேகர பாண்டியன் இறுதியில் கி. பி. 1167 ஆம் ஆண்டில் சோழநாட்டிற்குச் சென்று, அப்போது ஆட்சிபுரிந்து கொண்டிருந்த இரண்டாம் இராசாதிராச சோழனைத் தனக்கு உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டான். அவ்வேந்தனும் இவன் வேண்டுகோளுக்கிணங்கித் திருச்சிற்றம் பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் பெரும்படை யொன்றை இவனுக்குதவுமாறு பாண்டிநாட்டிற் கனுப்பினான். சோழநாட்டுப் படைக்கும் சிங்களப்படைக்கும் தொண்டி, பாசிப்பட்டினம் முதலான ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன. அப்போர்களில் சிங்களப் படைத்

1. இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தில் 76, 77- ஆம் அதிகாரங்களில் இப்போர் நிகழ்ச்சிகள் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றில் குறிக்கப் பெற்றுள்ள தமிழ்நாட்டூர்களுள் சிலவற்றை இப்போது அறிந்து கொள்ள முடியவில்லை.