உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -2

Pandya) Kingdoms must have been a sort of family estate in which all the grown up males had a share and interest.

5. கி.பி. 7-9 நூற்றாண்டுகளில் ஆண்ட பாண்டியர்கள் கொடிவழி பற்றியும் ஆட்சியாண்டுகள் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. அவர்கள் கொடிவழியை கே.வி.இராமன்(1977) பின்வருமாறு தந்துள்ளார். அது பண்டாரத்தார் (1956) கொடிவழியிலிருந்து சற்றே மாறுபடுகிறது.

கடுங்கோன் (575-600)

மாறவர்மன் அவனிசூளாமணி (600-620)

செழியன் சேந்தன் (620-642) (இவன் திருநெல்வேலி மாவட்டம் மலையடிக் குறிச்சி குகைக் கோயிலை அமைத்தவன்)

மாறவர்மன் அரிகேசரி (642 -700) (திருஞானசம்பந்தர் காலம்)

கோச்சடையன் ரணதீரன் (700-730)

(சுந்தரர் காலம்)

மாறவர்மன் அரிகேசரி ராசசிம்மன் 1 (730 - 768) (நம்மாழ்வார் காலம்)

நெடுஞ்சடையன் பராந்தகன்(வரகுணன் 1)768-815 (சங்கராச்சாரியார் காலம்) வேள்விக்குடி, சீவரமங்கலம், சின்னமனூர் (சிறியது) செப்பேடுகள் நெடுஞ்சடையன் காலத்தவை. நெடுஞ்சடையன் பராந்தகன் வேறு; வரகுணன்I வேறு என்பார் பண்டாரத்தார். பராந்தகனுக்கும் சிரிவல்லபனுக்கும் டையில் இராசசிம்மன்II, வரகுணன் ! என இருவர் ஆண்டிருக்க வேண்டும் என்பார் பண்டாரத்தார்.

I