உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

ஸ்ரீமான் சிரிவல்லபன் 815-862

xiii

(தெள்ளாறு போரில் பல்லவன் நந்திவர்மன் III இடம் தோற்றான்.)

வரகுணன் II 862 -885

திருப்புறம்பயம் போரில் சோழன்

ஆதித்தன் 1 இடம் தோற்றான்.) I

பராந்தக வீரநாராயணன் 862905

தளவாய்புரம் செப்பேடு

|

ராச சிம்மன் II - 900-920

(பண்டாரத்தார் கருத்துப்படி இராசசிம்மன் II )

6. தமிழக அரச பரம்பரையினர் அனைவரினும் தொன்மை வாய்ந்த பாண்டியர் பரம்பரையே பண்டைய அரசர் பரம்பரையினருள் கடைசியாக (கி.பி.17ஆம் நூற்றாண்டு) மறைவுற்றதும் ஆகும். அயைப் போகும் தீயானது அதிக ஒளியுடன் எரியும்;அதுபோல பாண்டியர் ஆட்சி முதன்மையுடன் வழங்கிய மூன்று கால அளவுகளில் கடைசியானகி.பி. 1200-1311இல் தான் தமிழகத்தின் தலைமை அரசாக விளங்கியது. அக்கால அரசர்களுள் முதன்மை வாய்ந்தவர்கள் வருமாறு:

சடையவர்மன் குலசேகரன் (- 1216)

மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238) (1218இல் சோழன் மூன்றாம் இராசராசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி தஞ்சையையும் உறையூரையும் சூறையாடினான்; சோழர் பாண்டியர்க்கு அடிபணிந்து ஆண்டனர்.)

மாறவர்மன் சுந்தரபாண்டியன் II (1238-1251)

சடையவர்மன் சுந்தரபாண்டியன் I (1251-1268)

(இவன் அதிகாரம் வடக்கே நெல்லூர் வரைச் சென்றது)

|

மாறவர்மன் குலசேகரன் (1268 - 1308) (மார்க்கோ போலோ 1296இல் பாண்டிய நாட்டுக்கு வந்தான். வழக்கம் போல இவன் காலத்திலும் இவனுக்கு அடங்கிய பாண்டிய குல அரசர் நாட்டின்பகுதிகளை ஆண்டு வந்ததை போலோ குறிப்பிடுகிறான்.)

சுந்தரபாண்டியன்

(இவனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த போரில் தனக்கு உதவ அலாவுதீன் தளபதி மாலிக்காபூரை 1311 ஏப்ரல் மாதம் மதுரைக்கு அழைத்து வந்தான்.)

வீரபாண்டியன்