உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xiv

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

7. மார்கோ போலோ தமிழ் நாட்டைப் பற்றி எழுதிய குறிப்புகளில் ( Yule and codier (1921) The Book of Ser Marco Polo; 3 மடலம்) தமிழ்நாடு சார்ந்தவற்றை "தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமது பிறந்தது எப்படியோ (1951) நூலில் தமிழாக்கித் தந்துள்ளார்.

8. பாண்டிய வரலாற்றுக் காலமாகிய கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை என்பது ஈராயிரம் ஆண்டுக் காலமாகும். இந்த நெடிய கால அளவில் தமிழகத்திலும் ( இந்தியாவிலும், உலகிலும்) மக்கள் தொகை இன்று உள்ள அளவில் அன்றி மிகக் குறைவாகவே இருந்திருக்கும் என்பதையும் மக்கள் தொகையும் 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிக மந்தமாகவே வளர்ந்து வந்தது என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வருடம்

இன்றைய தமிழகம்

இந்தியா (கோடிகளில்)

உலகம்

(கோடிகளில்)

30 லட்சம்

1

10

கி.மு. 500

கிறித்துவுக்குப் பின்னர்

1

40 லட்சம்

2

20

300

50 லட்சம்

1000

50 லட்சம் முதல்

5

ல் ம

2.50

22

27

1300

80 லட்சம் வரை

6

40

1600

80 லட்சம்

15

65

1800

1 கோடி 1.47 கோடி

18

100

21

120

1871 (முதல் இந்திய சென்சஸ்)

மக்கள்தொகை பண்டைக் காலங்களில் மிக மிகக் குறைவாக இருந்ததுடன் போக்குவரத்து, செய்தித் தொடர்பு வசதிகளும் அவ்வாறே இருந்திருக்க வேண்டும். அக்காலங்கள் பற்றி நமக்கு இன்று எஞ்சியுள்ள ஆதாரங்களும் மிகக் குறைபாடுடையவையே. எனவே பண்டைக் காலச் சமூகம் மற்றும் பிற நிலைமைகளைப் பற்றி எண்ணிப் பார்த்து எச்சரிக்கையுடன் எழுதுவதே பொருத்தமாகும். ஜே.எம்.இராபர்ட்ஸ் உலக வரலாறு (1992) நூலில் “பழங்காலத்தில் இருந்த ஐரோப்பிய மக்கள் அன்றாட வாழ்க்கை, சமூக உறவுகள் பற்றியெல்லாம் பொதுவான ஆனால் அபத்தமான கருத்தோட்டங்களைக் கூறுவது எளிது" என்று கூறியது தமிழகத்துக்கும் பொருந்துவதாகும். “வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை; மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று” “Most history is guessing and the rest is prejudice” என்றனர் வில் & ஏரியல் டூராண்ட்இணையர்.

996