உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

XV

9. கி.மு.10-13 ஆம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சோழன் தலைக் கொண்ட பாண்டியன்; பாண்டியன் தலைக் கொண்ட சோழன்; பாண்டியன் தலைக் கொண்டு அவன் மடக்கொடியை வேழம் ஏற்றிய சோழன்; மதுரையை எரித்து அழித்துச் சூறையாடிய சோழன்; சோழர் தலைநகரை அழித்துச் சூறையாடிய பாண்டியன் ஆகிய சாதனை வீரர் பலரை காண்கிறோம். இறுதி முடிவு என்ன? கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்பண்டைத் தமிழரசக்கால் வழியினர்அனைவரும் அழிந்து பல்வேறு அயலார் ஆட்சிக்குத் தமிழகம் தொடர்ந்து அடிப்பட்டது. இது போன்ற நிலைதான் இந்தியாவெங்கும். இதைத்தான் அறிஞர் ஸ்டான்லி வால்பர்ட் பின்வருமாறு விவரித்தார்: "இந்தியா தனது நெடிய வரலாற்றில் தொடர்ந்து அயலாரிடம் தோற்று அவர்களால் ஆளப்பட்டு வரும் அவலநிலையிலேயே இருந்து வந்துள்ளது. இதற்கு ஒரு காரணம் இந்நாடோ அதன் பெரும்பகுதிகளோ ஒரே ஆட்சியின் கீழ் / ஒரு சில ஆட்சிகளின் கீழ் இருப்பது நாட்டுமக்கள் அனைவர் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் உகந்தது என்ற உணர்வின்மையேயாம். அதைவிட அடிப்படையான காரணம் இந்தியருடைய ஒரு வகை மனநிலை; அது என்ன? தங்களுக்கு மிக நெருங்கிய சொந்தங்களாக, உறவுடையவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பாமல் அவர்களைச் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனுமே பார்க்கும் பார்வைதான்! (முற்றிலும் அயலாரிடம் பழகும்போது இந்தப் பார்வையை இந்தியர் மேற்கொள்வதில்லை!!)

"Indian disinterest in political unification or perhaps it is rather In- dian “suspicion” and “mistrust” of neighbouring strangers, no matter how close they may actually be, compared to other foreigners, has left India vulnerable to conquest througout her long history. AN INTRODUCITON TO INDIA: 1991

வால்பர்ட் கூற்றின் உட்கருத்து

“ஏதிலார் ஆரத்தமர் பசிப்பர் பேதை

பெருஞ் செல்வம் உற்றக்கடை”

என்ற குறளின் கருத்தேயாகும். வரலாற்றை மறப்போர் தாங்கள் பட்ட இன்னல்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பெறுவர். “Those who disregard the past are bound to repeat it” என்று ஜார்ஜ் சந்தயானா கூறியது இந்தியர் அனைவரும் உளம் கொள்ளத் தக்கது ஆகும்.

முன்னுரைக்கான நூற்பட்டியல்

கிருஷ்ணமூர்த்தி. இரா (1987) பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் Maloney, Clarence (1970) The beginnings of civilisation in South India p 603-16 of The Journal of Asian Studies Vol 29.