134
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 வற்றைக் கண்காணித்துக் காத்து வருவது வழக்கம். நாடு வகை செய்வோர், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களைக் கூறுபட அளிப்பார்கள். வரியிலார், ஊர்கள்தோறும் எல்லா வரியாலும் அரசாங்கத்திற்கு வரவேண்டிய தொகைக்குக் கணக்கு வைத்திருப் பவர்கள். புரவுவரித் திணைக்களத்தார், இக்காலத்திலுள்ள ‘ரெவினியூ போர்டு' போன்ற ஒரு கழகத்தினர் ஆவர். இக்கழகத் திற்குத் தலைவர் புரவுவரித் திணைக்களநாயகம் என்று வழங்கப்பெறுவர். திருமுகம் எழுதுபவர் என்போர் அரசனது ஆணையைத் திருவாய்க் கேள்வியால் உணர்ந்து ஓலையில் வரைந்து ஊர்ச்சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி அனுப்புவோர். சோழமண்டலத்தில் இவர்களைத் திருமந்திர ஓலை எனவும் திருமந்திர ஓலைநாயகம் எனவும் வழங்குவர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந் தோர்க்கு அவர்கள் ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, 'ராவ்பஹதூர்' 'திவான்பஹதூர்' 'சர்' முதலான பட்டங்கள் அளித்து அவர்களை மகிழ்வித்தமைபோல, பாண்டி வேந்தரும் தம் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளனர் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அளிக்கப்பெற்ற பட்டங்கள், அரையன், பேரரையன், விசையரையன், தென்னவன் பிரமராயன், தென்னவன், தமிழவேள், காவிதி, ஏனாதி, பஞ்சவன்மாராயன், பாண்டிய மூவேந்த வேளான், செழிய தரையன், பாண்டிய விழுப்பரையன், தென்னவ தரையன், பாண்டியப் பல்லவ தரையன், தொண்டைமான், பாண்டியக் கொங்கராயன், மாதவராயன், வத்தராயன், குருகுலராயன், காலிங்கராயன் முதலியனவாகும்.
ய
காவிதி, ஏனாதி முதலான பட்டங்களைப் பெற்ற அதிகாரிகளுக்குப் பொற்பூவும், மோதிரமும், இறையிலி நிலமும் அளிப்பது பண்டை வழக்கம். எனவே, காவிதிப்பட்டம் பெற்றவன் ஒருவன் எய்துவன காவிதிப் பூவும் காவிதி மோதிரமும் காவிதிப் புரவுமாம்.'
1.
ஏனாதிமோதிரம்-இறையனார் அகம். சூத்.2.உரை
2. (a) நன்னூல் 158- ஆம் சூத்திரம்-மயிலைநாதர் உரை.
(b) தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 30-ஆம் சூத்திரம் நச்சினார்க்கினியர் உரை.