உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

னி, உத்தம சோழனுடைய அரும்பெறலன்னையாகிய செம்பியன் மாதேவியின் வரலாற்றையும் சமயத் தொண்டையும் ஈண்டுச் சுருக்கமாக எழுதுவதும் ஒரு வகையில் ஏற்புடைய தேயாம்.

இவ்வரசி மழவர் குலத்தில் தோன்றி முதற் கண்டராதித்த சோழன் மாதேவியாகிப் பெருவாழ் வெய்தியவள்; எல்லையற்ற சிவபத்திச் செல்வம் படைத்தவளாய்ச் சிறப்புற்றிருந்தமைபற்றி மாதேவடிகள் எனவும் வழங்கப் பெற்றவள். இவ்வம்மை தன் கணவனை இளமைப் பருவத்தில் இழந்தும், குழந்தையாயிருந்த தன் ஒரே புதல்வனாகிய உத்தம சோழன் பொருட்டே உயிர் வாழ்ந்தவள். இவள், தன் கணவன் இறந்த பின்னர், அரிஞ்சயன், சுந்தரசோழன், உத்தம சோழன் ஆகிய மூவேந்தர் ஆட்சிக் காலங்களிலும் முதல் இராசராச சோழன் ஆட்சியில் கி. பி. 1001 வரையிலும் உயிருடன் இருந்தவள்'. இவ்வரசி, செங்கற் கோயில் களைக் கற்றளிகளாக எடுப்பித்தும் பல கோயில்களுக்கு நிவந்தங்கள் விட்டும் அணிகலன்கள் அளித்தும் பொன்னாலும் வெள்ளியாலும் பல்வகைக் கலங்கள் செய்து கொடுத்தும் புரிந்துள்ள அறங்கள் மிகப்பலவாம். அவற்றுள், முதலில் வைத்துப் பாராட்டற்குரியது தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரி ராசபுரம் என்று இக்காலத்தில் வழங்கப்பெறும் திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்தைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்த மாக இறையிலி நிலங்கள் அளித்திருப்பதேயாம்'. அத்திருக் கோயிலுக்கு ‘ஸ்ரீகண்டராதித்தன்' என்று தன் ஒப்புயர்வற்ற கணவன் பெயரையே இவ்வம்மை வழங்கியிருப்பது' அவன்பால் வைத்திருந்த பேரன்பினை இனிது புலப்படுத்தாநிற்கும். அக் கோயிலில் கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடுவ தாகப் படிமம் ஒன்று வைக்கப் பெற்றிருத்தலை இன்றுங் காணலாம். அக்கோயிலைச் செம்பியன் மாதேவியின் ஆணையின் படி சிறந்த கற்றளியாக எடுப்பித்தவன் ஆலத்தூருடையான்

1. Ins. 200 of 1904.

2.S.I.I.,Vol. III, Nos. 151 and 151 A.

3. S.I. I., Vol. III, No. 146.