உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

10. முதல் இராசராசசோழன் கி.பி.985 1014

சோழ இராச்சியத்தின் வளர்ச்சிக்கு முதற்காரணமாக இருந்தது சோழர் குடியில் தோன்றிய அரசர்களின் ஆற்றலேயாம். அத்தகைய ஆற்றலமைந்த சோழ மன்னர்களுள் முதல் இராசராச சோழன் தலைமை வாய்ந்தவன் என்று கூறலாம். இவ்வேந்தன் இரண்டாம் பராந்தக சோழனுக்கு அவன் பட்டத்தரசியாகிய வானவன் மாதேவிபாற் பிறந்த அரும்பெறற் புதல்வன் ஆவன்'. இவன் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத்திலும், இவன் பட்டத்தரசி திருவையாற்றில் கட்டுவித்த உலோக மாதேவீச் சுரத்திலும் திங்கள்தோறும் சதயநாளில் சிறப்பாக விழா நடை பெறுவதற்கு நிவந்தங்கள் விடப்பட்டிருத்தலால் இவன் சதய நன்னாளில் பிறந்தவ னென்பது நன்கறியக் கிடக்கின்றது'. இவனைச் ‘சதய நாள் விழா உதியர் மண்டலந்தன்னில் வைத்தவன்’ என்று கலிங்கத்துப் பரணி புகழ்ந்து கூறுவதாலும் இச் செய்தி வலியுறுகின்றது.

இவ்வேந்தன் மலையாள தேசத்தில் வள்ளுவ நாட்டி லுள்ள முட்டம் என்னும் ஊருக்கு மும்முடி சோழநல்லூர் என்று பெயரிட்டு அதனை அந்நாட்டில் திருநந்திக்கரையிலுள்ள 1. ‘செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன் இந்திர சமானன் இராஜசர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான்'

'மாதவித் தொங்கல் மணிமுடி வளவன்

சுந்தர சோழன் மந்திர தாரன்

திருப்புய முயங்குந் தேவி’

S. I. I., Vol. VII, No. 863.

Ibid, Vol. III, No.205.

2. Ibid, Vol. II, No. 26.

ல்

3.

க.பரணி-3, தா. 24.