உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

85

கோயிலுக்கு இறையிலியாக அளித்துத் தான் பிறந்த ஐப்பசித் திங்கள் சதய நாளில் விழா நடத்துமாறு ஏற்பாடு செய்து உள்ளமையால்' இவன் ஐப்பசித் திங்களில் சதய நாளில் பிறந்தவ னென்பது பெறப்படுகிறது. இவன் ஆட்சிக்காலத்தில், திருவெண் காட்டிறைவர்க்கு ஆண்டு தோறும் ஐப்பசித் திங்களில் ஏழு நாட்கள் சதய விழா நடைபெற்றதென்று அவ்வூர்க் கல்வெட் டொன்று கூறுவதும், இதனை உறுதிப்படுத்து கின்றது. ஆகவே, ஐப்பசித் திங்களில் சதய நாளிலே இவன் பிறந்தவனென்பது தேற்றம். எனவே, ஆவணித் திங்கள் சதயநாளில் இவன் பிறந்தவன் என்பார் கூற்றிற்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க.

இவ்வரசன் பிறந்தபோது ஆதிசேடன் மனைவியராகிய நாகர்குல மகளிர், தம் கணவர்க்கு இனி நிலப் பொறை குறைந்துவிடும் என்னும் உவகை மிகுதியால் நடித்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. அன்றியும், அச்செப்பேடுகள் இவன் கைகளில் சங்கு சக்கரக் குறிகள் அமைந்திருந்தன என்று புகழ்கின்றன அவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், இவன் பேரரசனாதற்குரிய உத்தம் இலக்கணங்கள் அமைந்த உடலமைப்புடையவனாய் இளமையில் திகழ்ந்திருத்தல் வேண்டுமென்பது இனிது புலனாகின்றது.

4

இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டுவழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது. இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டுமுதல் இவனுக்கு இராசராசன் என்னும் பெயரே வழங்கி வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகிறது. இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் செங்கற்பட்டு

1. ‘ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல . . . செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோ இராசராச கேசரிவன்மர்க்கு யாண்டு பதினெட்டாவது - இராசராசத் தென்னாட்டு வள்ளுவ நாட்டு முட்டம் முட்டமென்னும் பேரைத் தவிர்த்து மும்முடி சோழ நல்லூரென்று பேராக்கி இந்நாட்டுத் திருநந்திக்கரை மாதேவர்க்குப் பெருமாள் ஐப்பிசைச் சதயத்தினாள் திருவிழாவெடுத்து... '(Travancore Archaeological Series, Vol. I. p. 292). 2.S. I. I., Vol. V, No. 979.

3. Ibid, Vol. III, No. 205, Verse 63.

4. Ibid, Verse 61.

5.S.I.I.,Vol. V, Verse 61.

6. Ins. 56 of 1913.