உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

அணிந்துரை

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-3

பி.இராமநாதன் க.மு., ச.இ.,

இந்திய வரலாற்றிலேயே நெடுங்காலம் (ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு மேலாக) தொடர்ந்து ஆட்சி செய்து வந்த ஓரிரு அரச பரம்பரையினருள் சோழரும் ஒருவர். சில நூற்றாண்டுகள் (கி.பி.300 கி.பி.850) சோழர் சிற்றரசர்களாகவோ, மிகச்சிறு நிலப் பகுதிகளை ஆண்டவர்களாகவோ ஒடுங்கியிருந்தனர். அவற்றையும் சேர்த்துத்தான் இந்தக் கணக்கு. ன்றையத் தமிழகம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வந்த கி.பி.1800க்கு முன்னர், எப்பொழுதாவது இந்தநிலை இருந்தது என்றால் அது பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தில் அடங்கிய கி.பி. 900-1200 ஆகிய முந்நூறு ஆண்டுகளில்தான் (அந்த முந்நூறு ஆண்டுகளில் சேர நாட்டுப் பகுதியும் கூடச் சோழரின் கீழ்த்தான் இருந்தது). பிற்காலச் சோழர் (விசயாலயன் பரம்பரை ) ஆண்ட கி.பி. 846-1279 கால அளவின் உச்சகட்டத்தில் சோழப் பேரரசர் ஆட்சி வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணா ஆறுகள் வரை நடந்தது; 11ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பெரும்பகுதியும் அவ்வாட்சியின் கீழ் இருந்தது. "மொழிபெயர் தேயத்தின் வடக்கே” சங்ககாலத் தமிழ் வேந்தர் ஒரோவழி படையெடுத்து வென்றதாகக் கூறப்படுகிறதேயொழிய, நிலையான ஆட்சி நடத்தியதாகவோ தொடர்ந்து பிற அரசுகளிடம் கப்பம் பெற்று வந்ததாகவோ கூறப்படவில்லை. தமிழ் நாட்டிற்குள்ளும், பிற்காலச் சோழர் ஆட்சிக்கு முன்னர், பாண்டியர் - சோழரிடையே போர்கள் நடந்தன; ஆயினும் வென்ற நாட்டைத்தாமே (பரம்பரை அரசரை நீக்கிவிட்டு) தமது அரசப்பிரதிநிதி மூலம் ஆண்டதாகத் தெரியவில்லை. பிற்காலச்சோழர் அகலக்கால் வைத்து தமிழகத்துக்குள்ளும் வெளியிலும் நிகழ்த்திய போர் நடவடிக்கைகளும் ஓரளவுக்கு தமிழகமும் தென்னிந்தியாவும் 1300க்குப் பிறகு வீழ்ச்சியடையக் காரணமாக இருந்தனவோ என்பதும் ஆய்வதற்குரியது.

2. பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தைப் பற்றி அறிய கல்வெட்டுச் சான்றுகள் மிகப் பலவாகும். 1887 முதல் இன்று வரைத் தென்னாட்டில் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஏறத்தாழ 50000க்கும் மேற்பட்டவை (சுமார் 2000 செப்பேடுகள்; 3000 நாணயங்கள், முத்திரைகள் உட்பட) இந்தக் கல்வெட்டுக்களில் 26000 கல்வெட்டுக்கள் இன்றையத் தமிழகப் பகுதியில் கண்டவை; ஏறத்தாழ அனைத்தும் தமிழ்க் கல்வெட்டுக்கள். இந்த 26000இல் 35 விழுக்காடு ஆகிய 9000