உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

111

வேண்டும் என்பதை உறுதிப் படுத்துகின்றது. அக்கோயிலிலுள்ள முதற் கோபுர வாயிலாகிய திருத்தோரண வாயில் கேரளாந்தகன் வாயில் எனவும் இரண்டாம் வாயிலாகிய திருமாளிகை வாயில் இராசராசன் வாயில்' எனவும் அந்நாளில் வழங்கியுள்ளன; அக்கோயில் விமானம் தட்சிணமேரு என்று வழங்கியது. கோயிலின் வெளித் திருச்சுற்றிலுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப்பட்டது. அது பன்னிரண்டடி உயரமும் பத்தொன்பதரை அடி நீளமும் எட்டேகாலடி அகலமும் உடையது". கோயில் திருச்சுற்றில் பழைய அடியாராகிய சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டிருந்தனவேயன்றி வேறு தெய்வங்கட்கு மின்மை அறியற்பாலதாம்.

இனி, இராசராசேச்சுரமுடைய பெருமான் மீது இராசராசன் காலத்தவரான கருவூர்த்தேவர் என்னும் பெரியார் ஒரு பதிகம் பாடிப் பரவியுள்ளார். அது, சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் சேர்த்துத் தொகுக்கப் பட்டுள்ளது.

ராசராச சோழனும் இவன் உரிமைச் சுற்றத்தினரும் வழித் தோன்றல்களும் அக்கோயிலுக்கு மிக்க வருவாயுள்ள ஊர்களும் பெரும் பொருள்களும் அளித்துப் போற்றி வந்தனர் என்பது அங்குக் காணப்படும் பல கல்வெட்டுகளால் புலனாகின்றது. அன்றியும் இவன் காலத்தில் விளங்கிய அரசியல் அதிகாரிகளும் படைஞரும் அக் கோயிலுக்குப் பொற்பூக்களும் அணிகலன் களும் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்துள்ளனர்.

இனி, இராசராச சோழன் தஞ்சை மாநகரில் புதிய கோயில் ஒன்று அமைத்தனனா அன்றிப் பழைய கோயிலைப் பெரிய

1. S.I.I, page 96.

2. Ibid, pp. 227 and 332.

3. Ibid, page 7.

4. The Great Temle at Tanjore, page 12.

ம்

இராசராசசோழன் அளித்தவற்றை அடியிற் காண்க.

(i) பொற்கலங்கள் 41559 கழஞ்சு எடையுள்ளவை.

(ii) அணிகலன்கள் 10200 காசு விலைமதிப்புள்ளவை.

(iii) வெள்ளிக் கலங்கள் 50650 கழஞ்சு எடையுள்ளவை.

5

(iv) 1,16,000 கலம் நெல்லும் 1100 காசும் வருவாயுள்ள கிராமங்கள். (Malaviya Commemoration Volume, p. 324.)