உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

சிறியவேளான் ஆகிய திருக்கற்றளிப்பிச்சன் நம் இராசராசன் தந்தையாகிய சுந்தர சோழன் ஆட்சியில் படைத்தலைமை பூண்டு ஈழ நாட்டிற்குச் சென்று போர்புரிந்து அங்கு உயிர் துறந்தானென்று திருவெண்காட்டிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது'.

.

திருவல்லத்திலிலுள்ள ஒரு கல்வெட்டில் நன்னமரையன் என்னுங் குறுநில மன்னன் ஒருவன் குறிக்கப்பட்டுள்ளனன் வைதும்பர் மரபினனாகிய இவன் கடப்பை ஜில்லாவிலுள்ள இங்கல்லூர் நாட்டை ஆட்சிபுரிந்தவன். நெல்லூர் ஜில்லாவி லுள்ள ரெட்டிப்பாளையக் கல்வெட்டினால் விஷ்ணு தேவனாகிய மும்முடி வைதும்ப மகாராசன் என்னுஞ் சிற்றரசன் ஒருவன் அப்பக்கத்தில் இருந்தனன் என்று தெரிகிறது'. இவ்விருவரும் இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னர்கள் என்பது அன்னோரது கல்வெடுக்களினால் புலனாகின்றது.

வட ஆற்காடு ஜில்லாவிலுள்ள பஞ்சபாண்டவர் மலையில் காணப்படும் கல்வெட்டொன்று, வீர சோழன் இலாடப் பேரரையன் என்பவன் அதனைச் சூழ்ந்த நிலப் பரப்பை இராசராசன் காலத்தில் குறுநில மன்னனாயிருந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்று உணர்த்துகின்றது". இவன் தந்தை

.

லாட ராசன் புகழ்விப்பவர் கண்டன் என்பதும் இவன் முன்னோர் தொண்டை மண்டலத்தில் படுவூர்க் கோட்டத்தி லுள்ள பெருந்திமிரி நாட்டை யாண்டவர் என்பதும் அக்கல் வெட்டால் வெளிப்படுகின்றன. இராசராசன் மனைவியருள் இலாடமாதேவி என்பாள் இவ்விலாடப் பேரரையன் மகள் ஆதல் வேண்டும்; அன்றேல் இவன் தந்தை இலாடராசன் மகளாதல் வேண்டும். இப்போது அதனை ஒரு தலையாகக் கூற இயலவில்லை.

வாணகப்பாடி நாட்டில் அரசாண்ட மறவன் நரசிம்ம வர்மனாகிய இராசராச வாணகோவரையன் என்பவன் இராச

1. S.I.I, Vol. V, No. 980.

2. Ibid, Vol. III, No. 52.

3. Nellore Inscriptions, G. 88.

4. Ep. Ind., Vol. IV, No. 14 B.