உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

121

ராசனுக்கு உட்பட்ட ஒரு குறுநில மன்னன் என்பது தென்னார்க் காடு ஜில்லாவிலுள்ள ஜம்பை என்னும் ஊரில் காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது'. இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வாணகப்பாடி நாடு தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியாகும்.

இனி, இராசராசன் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் படைத்தலைவராகவும் நாட்டதிகாரிகளாகவும் திருமந்திர ஓலை நாயகமாகவும் அறநிலையக் கண்காணிப்பாளராகவும் அமர்ந்து அரசாங்கத்தை நன்கு நடத்திவந்த அரசியல் அதிகாரிகள் பலர் ஆவர். அவர்களுள் கல்வெட்டுக்களால் அறியப்படும் சிலரைப்பற்றிய செய்திகளை மாத்திரம் ஈண்டுச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் ஏற்புடையதேயாம்.

1. சேனாபதி கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரமமாராயன்:

வன் வெண்ணாட்டு அமண் குடியினன்; அந்தணர் குலத்தினன்; இராசராசனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; இவ்வேந்தன் ஆணையின்படி தஞ்சைப் பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகையை எடுப்பித்தவன். இச்செய்தியை யுணர்த்தும் மூன்று கல்வெட்டுக்கள் அக்கோயில் பிராகாரத்தில் மூன்று இடங்களில் வரையப்பட்டிருக்கின்றன'. அம்மூன்றும் ஒரே கல்வெட்டின் படிகளேயாம். ன் படிகளேயாம். இப்படைத்தலைவன் இராசராசன் ஆட்சியின் பிற்பகுதியில் திருமந்திர ஓலை நாயக மாகவும் இருந்தனன் என்பது ஆனை மங்கலச் செப்பேடுகளால் அறியப்படுகிறது'. இவன் அரசனால் வழங்கப் பெற்ற மும்முடி சோழ பிரமமாராயன் என்னும் பட்டம் பெற்றவன் ஆவன்.

1. Ins. Nos. 84 and 86 of 1906. இதில் குறிப்பிடப்பெற்ற ஜம்பை என்னும் ஊர், சோழமன்னர் ஆட்சிக்காலங்களில் சண்பை என்ற பெயருடைய தாயிருந்தது என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது.

2. 'உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் திருவாய்மொழிந்தருள இத்திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் சேனாபதி சோழமண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமண்குடியான கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம மாராயன் (S. I. I. Vol. II, Nos. 31,33 and 45) இக்கல்வெட்டில் காணப்படும் அமண்குடி இந்நாளில் அம்மங்குடி என வழங்குகிறது.'

3.Ep. Ind. Vol. XXII, No. 34.