உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

2.பரமன் மழபாடியானான மும்முடி சோழன்:

இவன் தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருகாடி என்னும் ஊரினன்; இராசராசனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; இம்மன்னன் விரும்பியவாறு நெல்லூர் ஜில்லாவிலுள்ள சீட்புலி நாடு, பாகி நாடு என்பவற்றின் மேல் படையெடுத்துச் சென்று அவற்றைக் கைப்பற்றியவன். இவன், தான் அங்கிருந்து கொணர்ந்த திறைப் பொருள்களுள் தொளாயிரம் ஆடுகளைக் கச்சிப்பேட்டு ஐஞ்சந்தி துர்க்கையார்க்கு இராசராசன் திருநாமத்தால் பத்து நுந்தா விளக்குகளுக்கெனச் சாவாமூவாப் பேராடுகளாக அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது”.

3. சேனாபதி குரவன் உலகளந்தானான இராசராச மாராயன்:

இவன் இராசராச சோழன் படைத்தலைவருள் ஒருவன்; அரசன் ஆணையின்படி கி. பி. 1001-ஆம் ஆண்டில் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்து எவ்வளவு நன்செய் புன்செய் களும் காடுகளும் உள்ளன என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மாத்திரம் வரி விதிக்குமாறு ஏற்பாடு செய்தவன்”. இவன் இராச்சியம் முழுமையும் அளந்தமை பற்றி இவனுக்கு உலகளந்தான் இராசராச மாராயன் என்ற பட்டம் இராசராசனால் வழங்கப் பட்டிருத்தல் அறியத்தக்கது. 4. மதுராந்தகன் கண்டராதித்தன்:

இவன் இராசராசன் சிறிய தந்தையாகிய உத்தம சோழன் புதல்வன்; இவ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் கோயில்களைக் கண்காணித்து அவற்றில் தவறிழைத்தவர்களைத் தண்டித்து அவை நல்ல நிலையில் இருக்குமாறு பாதுகாத்து வந்த பெருமை யுடையவன்". சில கோயில்களின் வருவாய்களை ஆராய்ந்த போது அக் கோயில்களில் நாள் வழிபாடுகள் முறைப்படி நடைபெறுவதற்கு அவற்றிற்கு அளிக்கப் பெற்றிருந்த நிவந்தங்கள் போதாமை கண்டு இன்றியமையாமைக் கேற்ப

1. Ins. 79 of 1921.

2. S. I. I., Vol. XIII, Nos. 149, 150.

3.S. I. I., Vol. VIII, No. 223; Ibid, Vol. II, p. 6 and No.95; Ins. 44 of 1907.

.

4. Ibid, Vol. III, No. 49; Ins. 282 and 283 of 1906; Ins. 218 of 1921.