உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இனி, இவனை, றைவன் நெற்றிக்கண் காணாத மற்றொரு காமவேள் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுவதால், இவன் பேரழகு வாய்ந்தவனாயிருந்திருத்தல் 1 வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவன், தன் பாட்டனாகிய சுந்தர சோழனைப்போல் எழிலுடன் திகழ்ந்தனன் எனலாம்.

கி. பி. 1012-ஆம் ஆண்டில்’இராசராச சோழன் இவனுக்கு ளவரசுப் பட்டம் கட்டிய நாளில் இராசேந்திரன் என்ற அபிடேகப் பெயர் வழங்கியமையால் இவன் தன் ஆட்சிக் காலம் முழுமையும் அப்பெயருடன் விளங்கினன் என்பது அறியற்பால தொன்றாம். கி. பி. 1014-ஆம் ஆண்டில்

ராசராசன் இறந்தவுடன் இவன் முடிசூட்டப் பெற்று, சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாயினான். இவன் ஆட்சியை ஏற்றுக்கொண்ட நாளில் சோழ இராச்சியம் இக்காலச் சென்னை ஆந்திர இராச்சியங் களையும், மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் தன்னகத்துக் கொண்டு ஒரு சிறந்த ராச்சியமாக இருந்தது எனலாம். அக்காலத்தில் சோழ இராச்சியத்திற்கும் வடக்கேயுள்ள மேலைச்சளுக்கிய நாடாகிய குந்தள இராச்சியத் திற்கும் இடையில் எல்லையாக அமைந்திருந்தது துங்கபத்திரை யாறேயாம்.

சோழ மன்னர்கள் தம் ஆட்சியைக் கைக்கொள்ளும் போது ஒருவர் பின்னொருவராக மாறிமாறிப் புனைந்து கொண்டு வந்த இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள் இவன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன்.

இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய கி. பி. 1018-ல்' தன் முதற் புதல்வன் இராசாதிராசனுக்கு இளவரசுப் பட்டஞ் சூட்டி அரசாங்க அலுவல்களைப் பார்த்து வருமாறு செய்தான். அச்செயலால் அரசற்குரிய அரசியற்

1. S. I. I., Vol. III, No. 205, Verse 85.

2.

கி. பி. 1012 மார்ச்சு 27- க்கும் ஜூலை 7- க்கும் இடைப்பட்ட ஒரு நாளில் இவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டப் பட்டிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (Ep. Ind., Vol VIII, p. 260.)

3. இவன் இளவரசுப்பட்டம் பெற்றது கி. பி. 1018-ஆம் ஆண்டில் மார்ச்சு 15-க்கும் டிசம்பர் 3 க்கும் இடையில் ஒரு நாளில் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பர். Ep. Ind. Vol. IX, p. 218.