உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

129

பொறை ஓரளவு குறைந்து போவதும் பின்னர் அரசனாகி ஆட்சிபுரிய வேண்டியவன் அரசியற் கருமங்களிற் சிறந்த பயிற்சி பெறுவதற்குத் தக்க வாய்ப்பு ஏற்படுவதும் ஆகிய இரு வகை நன்மைகள் உண்டாதல் உணரற்பாலதாகும். அன்றியும் அரசனாக இருந்து ஆட்சி புரிந்து கொண்டிருப்பவன், தனக்குப் சி பின் அரசாளும் உரிமையுடையவனைத் தன் ஆட்சிக் காலத்திலேயே இளவரசனாக முடிசூட்டிவிட்டால் பிற்காலத்தில் ஆட்சியுரிமைபற்றி அரச குமாரர்களுக்குள் எத்தகைய போர் நிகழ்ச்சியும் ஏற்படாது. மேலும், உள்நாட்டில் அதுபற்றிக் கலகமும் குழப்பமும் உண்டாக மாட்டா. ஆதலால் இராசேந்திரனுடைய அருஞ்செயல் மிகப் பாரட்டத்தக்க தொன்றாகும்.

இனி, இவனது மெய்க்கீர்த்தி, 'திருமன்னி வளர இரு நில மடந்தையும் போர்ச்சயப் பாவையும் சீர்த்தனிச் செல்வியும் தன் பெருந் தேவியராகி இன்புற' என்று தொடங்குகின்றது. அம்மெய்க்கீர்த்தி, இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான்' முதலில் காணப்படுகிறது; எனினும், அது மிகுதியாகக் காணப்படுவது ஐந்தாம் ஆட்சியாண்டு முதல்தான் என்பது அறியத்தக்கது. அவ்வப்போது நிகழும் அரசனுடைய வீரச்செயல்களையும் புகழுக்குரிய பிற செயல் களையும் மெய்க்கீர்த்தியில் ஆண்டுதோறும் சேர்த்துக் கொண்டே போவது அக்கால வழக்கமாதலின், அரசனது ஆட்சிக்காலம் மிகுந்து செல்லச் செல்ல, மெய்க்கீர்த்தியும் அதன் அளவிற் பெருகிக்கொண்டே போகும். அதனால் ஓர் அரசன் ஆட்சியில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வெவ்வாண்டில் நடைபெற்றது என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ளலாம். நம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இவன் ஆட்சியில் ஆண்டு தோறும் நிகழ்ந்த வீரச் செயல்களையும் பிறவற்றையும் முறை யாகப் புலப்படுத்தும் வகையில் பெருகிக் கொண்டேபோய், வனது பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் ஒரு நிலையில்

1. Ins. 451 of 1908.

2

2. இத்தகைய மெய்க்கீர்த்திகள் நம் தமிழ் நாட்டில்தான் காணப்படுகின்றன. வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படும் மெய்க்கீர்த்தியை முதலில் கல்வெட்டுக்களில் வரையத் தொடங்கியவன் நம் இராசேந்திர சோழன் தந்தையாகிய முதல் இராசராச சோழன் என்பது முன் விளக்கப் பட்டுள்ளது.