உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 அமைந்துள்ளது. பிறகு, இவன் ஆட்சிக் காலம் முழுவதும் அந்நிலையிலேயே இருந்தது எனலாம்.

இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டில் வட திருவாலங் காட்டுக் கோயிலுக்கு விடப்பெற்ற நிவந்தத்தை உணர்த்தும் இவனது திருவாலங்காட்டுச் செப்பேடுகள்' இவன் முன்னோர் வரலாற்றை நன்கு விளக்குகின்றன; எனினும் இவன் ஆட்சிக் காலத்து நிகழ்ச்சிகளை இவன் மெய்க்கீர்த்தியைப்போல் அத்துணை முறைப்பட அச்செப்பேடுகள் கூறவில்லை. இவனது புறநாட்டுப் படை யெழுச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னரே திருவாலங்காட்டுச் செப்பேடுகள் வரையப்பட்டிருக் கின்றன. ஆதலால் அவற்றிற் கூறப்படும் இவன் வீரச்செயல்கள் அவை நிகழ்ந்த கால வரிசைப்படி அமையாமல் வேறுபட்டும் இருக்கின்றன. எனினும், அச்செப்பேடுகள் இவன் மெய்க் கீர்த்தியில் காணப்படும் செய்திகளை உறுதிப்படுத்துவதாலும் பண்டைச் சோழ மன்னர்களின் வரலாற்றைக் கூறுவதாலும் சரித ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவேயாம்.

இனி, இவ்வேந்தனது மெய்க்கீர்த்தியின் துணைகொண்டு இவன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண்பது அமைவு டைத்தேயாம். இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில் இடைதுறை நாடு, வனவாசி கொள்ளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம்' என்பவற்றை இவன் வென்று தன்னடிப் படுத்திய செய்திகள் சொல்லப்பட்டிருக் கின்றன. அவற்றுள், இடைதுறை நாடு என்பது கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையில் அமைந் திருந்த ஒரு நாடாகும். இக் காலத்தில் பம்பாய் மாகாணத் திலுள்ள ரெய்ச்சூர் ஜில்லாவே பழைய இடைதுறை நாடு என்று

3

1. Thiruvalangadu Plates of Rajendra Chola, S. I. I., Vol.III, No. 205.

2. நெடிதியலூழியுள் இடைதுறை நாடும்

தொடர்வனவேலிப் படர்வன வாசியும்

சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும்

நண்ணற்கருமுரண் மண்ணைக்கடக்கமும்’ (மெய்க்கீர்த்தி)

3. Ep. Ind., Vol. XII, pp. 295, 296 & 308.