உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

131

கொள்வது மிகப் பொருந்தும். அதனை, 'எடத்தோர் இரண்டாயிரம்' எனவும் அந்நாட்டுக் கல்வெட்டுக்கள் கூறாநிற்கும்.'

இனி, வனவாசி என்பது மைசூர் இராச்சியத்தின் வட மேற்குப் பகுதியைத் தன்னகத்துக்கொண்டு முற்காலத்தில் நிலவிய ஒரு நாடாகும். அது கங்கபாடிக்கு வடக்கிலும் துளம்ப பாடிக்கு மேற்கிலும் இருந்தது எனலாம். அதனை வனவாசிப் பன்னீராயிரம் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

கொள்ளிப்பாக்கை என்பது ஹைதராபாத்திற்கு வட கிழக்கில் நாற்பத்தைந்து மைல் தூரத்திலுள்ள 'குல்பாக்' என்ற ஊராகும்'. 'கொள்ளிப்பாக்கை ஏழாயிரம்' என்று பிற்காலக் கல்வெட்டுக்கள் கூறுவதால் அஃது ஒரு நாட்டின் தலைநகராக இருந்திருத்தல் வேண்டும். அன்றியும் மேலைசளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் மகன் மூன்றாம் சோமேசுரன் என்பான் தன் தந்தையின் கீழ் அரசப் பிரதிநிதியாக அந்நகரிலிருந்து அதனைச் சூழ்ந்த நாட்டைப் பிற்காலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான் என்று தெரிகிறது. ஆகவே, அது மேலைச் சளுக்கியரது இராச்சியத்தின் தென்பகுதியிலிருந்த ஒரு சிறந்த நகரமாதல் வேண்டும். 'சுள்ளிச் சூழ் மதில் கொள்ளிப் பாக்கை' என்று கல்வெட்டுக்கள் கூறுவதால் அது சிறந்த மதில் அரண்களையுடைய பெரிய நகரமாக அந்நாட்களில் இருந் திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

மண்ணைக்கடக்கம் என்பது இராஷ்டிரகூடர்களுக்குத் தலைநகரமாயிருந்த மானியகேடமேயாம். இக்காலத்தில் அது 'மால்செட்' என்று வழங்குகின்றது. அந்நகர், இராஷ்டிர கூடர் களுக்குப் பிறகு சில ஆண்டுகள் வரையில் மேலைச் சளுக்கி யர்க்கும் தலைநகரமாயிருந்தது. வடக்கேயிருந்த மாளவ தேயத்துப் பரமாரக் குலத்து மன்னர்களும் தெற்கேயிருந்த சோழ அரசர்களும் அந்நகரத்தின் மீது அடிக்கடி படையெடுத்துச் சென்று அழித்து வந்தமையோடு அதனைப் பல்வகை இன்னல் களுக்கும் உட்படுத்தி வந்தனர். அதுபற்றியே மேலைச்

1. Ep. Ind., Vol, XII, p. 295.

2. Ep. Ind., Vol. XII, p. 295.