உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

சளுக்கியர்கள் அந்நகரத்திற்கு வடகிழக்கில் நாற்பத்தெட்டு மைல் தூரத்திலுள்ள கலியாண புரத்தைத் தக்க அரணுடைய நகரமாகக் கருதித் தம் தலைநகரை அங்கு மாற்றிக் கொண்டனர்.

-

மேலைச் சளுக்கியரது ஆட்சிக்குட்பட்ட இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம் என்பவற்றின் மீது இராசேந்திரன் படையெடுத்துச் சென்று வெற்றி யெய்திய செய்திகள் இவனது ஆட்சியின் தொடக்கத்தில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களிலேயே காணப்படுவதால் அந்நிகழ்ச்சிகள் இவன் பட்டம் பெறுவதற்கு முன்னர் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. மேலைச் சளுக்கிய மன்னனாகிய சத்தியாசிரயன் கி.பி. 1008 ஆம் ஆண்டில் இறந்துவிட்டபடியால் அவனோடு நிகழ்த்தப்பெற்றனவாக அறியப்படும் அப்போர்கள் எல்லாம் அவ்வாண்டிற்குமுன் நடைபெற்றவை என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, அவை இராசராசசோழன் ஆட்சிக்காலத்தில் அவன் புதல்வனாகிய நம் இராசேந்திரன் வடபுலத்தில் பெற்ற வெற்றிகளேயாதல் வேண்டும். கி. பி. 1007 - ல் நிகழ்ந்ததாக ஹொட்டூர்க் கல்வெட்டு உணர்த்தும் இவனது வடநாட்டுப் படையெழுச்சியும் ஒருகால் அவற்றையே குறிப்பினும் குறிக்கலாம்.

2

இனி இராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் அடுத்துக் கூறப் படுவது இவன் ஈழநாட்டை வென்ற செய்தியேயாம். அப்போர் நிகழ்ச்சி இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக் களில்தான் முதலில் காணப்படுகிறது. அந்நிகழ்ச்சி, அவ்வாண்டுக் கல்வெட்டுக்களுள் சிலவற்றில்' குறிக்கப்படாமலிருத்தலை நோக்குமிடத்து இவ்வேந்தன் ஈழநாட்டில் நிகழ்த்திய போர் 1. Ep. Ind., Vol, XVI, p.74.

2. பொருகட லீழத் தரசர்தம் முடியும்

ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரன் ஆரமும் தெண்டிரை ஈழ மண்டலம் முழுவதும்'

(S. I. I., Vol. IV, No. 327; Ibid, Vol. VII, No. 860; Ibid, Vol. VIII, No. 583)

3. S. I. I. Vol. V, No. 1413; Ibid, Vol. VII, No. 814 Ins. 140 of 1919; Ins. 235 of 1926.