உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

அந்நாடு சயசிங்கன் ஆட்சிக்கு உட்பட்டதாயிருந்திருத்தல் வேண்டும். ஆகவே, இரட்டபாடி இராச்சியத்தில் துங்கபத்திரை யாற்றிற்கு வடக்கேயுள்ள பகுதிகளை மீண்டும் சயசிங்கன் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்திக்கொண்டனன் எனலாம். ஆனால் அவ்விராச்சியத்தில் அப்பேராற்றிற்குத் தெற்கேயுள்ள பகுதிகள் இராசேந்திர சோழன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன என்பது ஒருதலை.

இனி, இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டுக் கல் வெட்டில் இவனது வடநாட்டுப் படையெழுச்சி கூறப்பட்டுளது. அதில் இவ்வேந்தன் படைகள் வடநாட்டில் புரிந்த வீரச்செயல்கள் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. அந் நிகழ்ச்சிகள் கி. பி. 1023- ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும். அவற்றை ஆராயுமிடத்து, அவைகள் எல்லாம் முடிவுபெறுதற்குக் குறைந்த அளவில் இரண்டு ஆண்டுகளாயினும் சென்றிருத்தல் வேண்டும் என்று கூறுவது மிகப் பொருந்தும்.

இராசேந்திரனது வடநாட்டுப் படையெழுச்சிக்குக் காரணம், இவன் கங்கை நீரைக் கொணர்ந்து தன் நாட்டைத் தூய்மை யாக்குவதற்குக் கருதினமையேயாம் என்பது திருவாலங் காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது.1 எனவே, இவன் தன் ஆட்சியில் புதிய தலைநகர் ஒன்று அமைப்பதற்குத் தொடங்கி, அது நிறைவேறியவுடன் அந்நகரம் தூய்மையுடையதாகக் கருதி மக்கள் குடியேறும் பொருட்டு அதனைக் கங்கை நீரால் புனிதமாக்குவதற்கு இவன் எண்ணியிருத்தல் வேண்டும். அது பற்றியே, வனது வட நாட்டுப் படை யெழுச்சியும் நிகழ்ந் திருத்தல் வேண்டும். வடதிசையிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வருங்கால் அத்திசையிலுள்ள வேந்தர்களையும் போரில் வென்று அதனைக் கொணர எண்ணுதல் வீரம் நிறைந்த பழங்குடியில் தோன்றிய பேரரசன் ஒருவனுக்கு இயல்பேயாம். அன்றியும், கங்கை நீரைச் சோழ நாட்டிற்குக் கொண்டுவருவது அதன் கரைவரையிலுள்ள அரசர்களைப் போரில் வென்று வாகை சூடினால்தான் எளிதில் நிறைவேறும் என்று இராசேந்திரன் கருதியிருக்கலாம் எனவே, இவ்வேந்தன், தன் படைகளைச்

1. S. I. I., Vol. III, No. 205, Verse 109.