உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

139

சோழரிடம் தன் தந்தையும் தமையனும் இழந்த நாடுகளைத் திரும்பக் கைப்பற்றுவதற்கு முயன்று, அச்செயலில் சிறிது வெற்றி பெற்றமையேயாம். அதற்கேற்ப, கி. பி. 1019-ல் பௌகாம்வே (Belagamve) என்ற ஊரில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று சயசிங்கன் சோழரை வென்ற செய்தியைக் கூறுகின்றது. அன்றியும், பல்லாரி ஜில்லாவிலும் மைசூர் இராச்சியத்தின் வடமேற்குப் பகுதியிலும் சயசிங்கன் கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. ஆகவே, சோழர் ஆட்சிக்கு உட்பட்டனவாய் எல்லைப்புறத்திலிருந்த சில பகுதிகளை அவன் மீண்டும் கைப்பற்றிக்கொண்டனன் என்பது தெள்ளிது. அது பற்றியே, இராசேந்திர சோழன் சயசிங்கனோடு முயங்கியில் போர் புரிய நேர்ந்தது என்பதும் அப்போரில் இவன் வாகை சூடிப் பெரும் பொருளுடன் சோழ நாட்டிற்குத் திரும்பினன் என்பதும் தேற்றம்.

ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற முயங்கி என்பது சில கல்வெட்டுக் களில் ‘முசங்கி' என்றும் எழுதப்பெற்றுள்ளது'. அது பல்லாரி ஜில்லாவில் ஹர்ப்பனஹல்லி தாலூகாவிலுள்ள உச்சங்கி துருக்கமே யாதல் வேண்டும் என்பது கல்வெட்டிலாகா அறிஞர்களின் கருத்து'. பிறிதொருசாரார், நைசாம் இராச்சியத் திலுள்ள மாஸ்கி என்ற ஊரே பழைய முயங்கியாய் இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்'. அஃது எவ்வாறாயினும், அவ்வூர் மேலைச் சளுக்கிய இராச்சியத்தில் இருந்த ஒரு நகரம் என்பது திண்ணம்.

இடைதுறை நாட்டிலிருந்த மாடதூஜுரு என்ற ஊரை மேலைச் சளுக்கிய மன்னனாகிய சயசிங்கன் என்பான் கி. பி. 1024-ல் அந்தணன் ஒருவனுக்கு இறையிலியாக அளித்தனன் என்று மிராஜ் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதலால் அவ்வாண்டில்

1. Dynasties of Kanarese Districts, p. 436.

2. Ep. Car., Vol. VII, S. K. 220 and 307.

3.S.I.I., Vol. II, No.17.

4. Ibid, p. 95.

."

5. Sir Asutosh Mwukherjee Commemoration Vol. III, p. 545.

6. Ep. Ind., Vol. XII, No. 34, (Miraj Plates of Jayasimha II)