உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

கூடும்.

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயருடையவனாயிருத்தலால் கீழைச் சளுக்கியர் வழித்தோன்றலாயிருத்தல் கி. பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் சோழர்க்கும் கீழைச் சளுக்கியர்க்கும் மணவினை முதலியவற்றால் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததேயாம். எனவே, கோட்டாற்றில் அமைக்கப்பெற்றிருந்த சோழருடைய நிலைப் படைக்கு அச்சளுக்கிய அரச குமாரன் தலைவனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

இம்முறை இராசேந்திர சோழன் நிகழ்த்திய படை யெழுச்சிகளில் புதிய நாடுகளுள் ஒன்றாதல் கைப்பற்றப் படவில்லை. ஆயினும், முன் கைப்பற்றிய நாடுகளில் தன் மகனை அரசப் பிரதிநிதியாக அமைத்து அவற்றைத் தன் ஆளுகையின் கீழ் இவன் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

இனி, இராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டு, இவன் முயங்கி என்னும் ஊரில் மேலைச் சளுக்கிய மன்னனாகிய சயசிங்கனைப் போரில் வென்று இரட்டப்பாடி ஏழரை இலக்கத்தைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றது'. அச்செய்தி, அவ்வாண்டுக் கல்வெட்டுக்களுள் சிலவற்றில் காணப்படவில்லை. ஆகவே அவ்வாண்டின் பிற்பகுதியில் கி.பி.1020-ல் அப்போர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இவன், காஞ்சிமா நகரிலிருந்து பெரும் படையுடன் புறப்பட்டு, இரட்டபாடி நாட்டிற்குச் சென்று அந்நாட்டரச னாகிய சயசிங்கனை வென்று காட்டிற்குள் ஓடி ஒளிந்து கொள்ளுமாறு செய்து, அங்குக் கிடைத்த மணித்திரளும் பொற்குவியலும் கைப்பற்றிக் கொண்டு தன் நாட்டிற்குத் திரும்பினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்து கின்றன.

மேலைச் சளுக்கியருடன் இராசேந்திரன் அப்போர் நிகழ்த்தியமைக்குக் காரணம், ஐந்தாம் விக்கிரமாதித்தன் ளவலான சயசிங்கன் என்பவன் கி. பி. 1016-ல் முடிசூடிச்

1. Ins. 624 of 1920.

.