உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

137

உரிமையையும் இராசேந்திரன் பிறகு அளித்துள்ளான் என்று தெரிகின்றது. அவ்வுண்மை, சேர நாட்டில் காணப்படும் அவன் கல்வெட்டுக்களால் புலனாகின்றது. நாஞ்சில் நாட்டுச் சுசீந்திரம் சுந்தர சோழச் சதுர்வேதிமங்கலம் என இவன் பெயரால் வழங்கி யுள்ளமையும் அறியத்தக்கது. சோழர் குலத் தோன்றலாகிய அவன் பாண்டி நாட்டை ஆண்டமையால் அவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டமும் அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி' சடையவர்மன் என்ற பட்டமும் இராசேந்திரனால் வழங்கப் பெற்றன என்பது ஈண்டு அறியற்பாலது.

3

2

திருநெல்வேலி ஜில்லாவில் மன்னார் கோயிலில் வரையப் பட்டுள்ள ஒரு கல்வெட்டால் சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பவன் கி. பி. 1018-ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் அரசப் பிரதிநிதியாக முடிசூட்டப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது. அவனது ஆட்சியும் கி. பி. 1042 வரையில் அங்கு நடைபெற்றது என்று தெரிகிறது. சேர மன்னனாகிய இராச சிங்கன் என்பவன் பாண்டி நாட்டிலுள்ள மன்னார் கோயிலில் ஒரு விண்ணகரம் எடுப்பித்து அதற்கு இராசேந்திர சோழ விண்ணகரம் என்று பெயரிட்டிருத்தலால் அச்சேரன் இராசேந்திர சோழனுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.

இனி, நாகர்கோயிலுக்கண்மையிலுள்ள கோட்டாற்றில் இராசேந்திர சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு விஷ்ணு வர்த்தன மகாராசனான சளுக்கிய விசயாதித்தன் விக்கியண்ணன் என்பான், சுந்தர சோழ பாண்டியன் ஆட்சியில் கி. பி. 1029-ல் ஒரு நுந்தா விளக்கிற்கு நிவந்தம் அளித்தனன் என்று அக்கோயிலிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது. அவன்,

1. T.A. S., Vol. IV, Nos. 32 & 35; Ibid, Vol. V, No.7A and B; Ibid, Vol. VI, Nos. 4 to 10.

2. பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து வந்த பாண்டி வேந்தர்கள் எல்லாம் கடைச்சங்க காலத்திற்குப் பிறகு மாறவர்மன் சடையவர்மன் என்ற இரு பட்டங்களையும் ஒருவர்பின் ஒருவராக மாறிமாறிப் புனைந்துகொண்டு அரசாண்டனர் என்பது அன்னோர் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியக்கிடக்கின்றது. அதுவே பாண்டி நாட்டு ஒழுகலாறு என்றுணர்க. 3. Ins. 112 of 1905.

4. T. A. S., Vol. VI, No.4