உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

முடியாமையால் அவன் அமைத்த நாட்டைக் கைப்பற்ற விரும்பினான். அதனை நிறைவேற்றும் பொருட்டு, இவன் மலைய மலையைக் கடந்து சென்று, சேர மன்னரோடு பெரும் போர் புரிந்து வெற்றி எய்தித் தன் நாட்டிற்குத் திரும்பினான் என்பனவேயாம்.

-

இவன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சேர நாடும் பாண்டிய நாடும் சோழரது ஆட்சிக்குள்ளாகி விட்டன என்பது அந்நாடுகளில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படு கின்றது.1 ஆகவே, இராசேந்திர சோழன் அந்நாடுகளை வென்று தன்னடிப்படுத்தினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது அத்துணைப் பொருத்தமுடையதாகக் காணப்பட வில்லை. எனினும், புதுச்சேரியைச் சார்ந்த திருவாண்டார் கோயிலில் வரையப் பெற்றுள்ள இவனது ஆட்சியின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, 'பாரது நிகழப் பாண்டி மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்துத் தன் மகன் சோழ பாண்டியன் என்ற பிஷேகஞ் செய்து தண்டாற்சாலைக் கலமறுத்த கோப்பரகேசரி2' என்று கூறுகின்றது. அதனை ஆராய்ந்து பார்க்குங்கால் இவ்வேந்தன் மதுரைமா நகரில் ஓர் அரண்மனை எடுப்பித்து அங்குத் தன் மகனைச் சோழ பாண்டியன் என்னும் பட்டத்துடன் முடிசூட்டிப் பாண்டி நாட்டை ஆட்சி புரிந்து வருமாறு ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. அங்ஙனம் மதுரையம்பதியிலிருந்து தன் தந்தையின் ஆணையின்படி ஆட்சிபுரியத் தொடங்கியவன் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் என்பது பாண்டி நாட்டில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இச்செய்திகளையே திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பாக உணர்த்துகின்றன என்று கொள்வது ஒருவாறு பொருந்தும்.

இனி, பாண்டி நாட்டை ஆண்டு கொண்டிருந்த அச் சடைய வர்மன் சுந்தரசோழ பாண்டியனுக்குச் சேர நாட்டின் ஆட்சி

1. T.A.S., Vol. II, No. I; Ibid, Vol. IV, No. 29; Ibid, Vol. VI. Nos. 102, 104 and 105; S. I. I., Vol. V, Nos. 724 and 756; Ins. 333 of 1923; 84 of 1927; 2 of 1927; 132 of 1910; 272 of 1928; 713 of 1916.

2. Ins. 363 of 1917.