உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

135

என்பதும் அவன் கி. பி. 1041-வரையில் அந்நாட்டிலிருந்து அரசாண்டனன் என்பதும் மகாவம்சத்தால் அறியப்படுகின்றன.

இராசேந்திர சோழனது ஆட்சியின் ஆறு ஏழாம்' ஆண்டு களில் வரையப்பெற்ற கல்வெட்டுகள் இவன் சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அந்நாட்டரசர்க்கு வழிவழி யுரிமையுடையனவாயிருந்த முடியையும் மாலையையும் கி.பி.1018-ல் கைப்பற்றிக்கொண்டு பழந்தீவையும் பிடித்துக் கொண்டான் என்றும் யாவரும் கிட்டுதற்கரிய அரண்களை யுடைய சாந்திமத்தீவில்' பரசிராமனால் வைக்கப்பட்டிருந்த செம்பொன் முடியைக் கி. பி. 1019-ஆம் ஆண்டில் கவர்ந்து கொண்டான் என்றும் உணர்த்துகின்றன.

இனி, இராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் காணப்படாத சில செய்திகள் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ளன. அவை: இவன் திக்குவிசயம் செய்யக் கருதி தான் இல்லாதபோது சோழ நாட்டில் ஆட்சி அமைதியாக நன்கு நடைபெறுமாறு தக்க ஏற்பாடு செய்துவிட்டுத் தென்றிசையிலுள்ள பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் எதிர்த்துப் போர் புரியும் ஆற்றலில்லாதவனாய்ப் புறங்காட்டி யோடி மலைய மலையில் ஒளிந்துகொண்டான். பிறகு, நம் இராசேந்திரன் பாண்டியன் புகழுக்குரிய முத்துக்கள் எல்லா வற்றையும் கைப்பற்றிக் கொண்டு, தன் மகன் சோழ பாண்டியன் அந்நாட்டை யாண்டு வருமாறு செய்து மேற்கே சென்றான். பரசிராமனால் பண்டை வேந்தர்கள் அடைந்த அல்லல்களைக் கேள்வியுற்ற இவ்வேந்தன், அவனை இந்நிலவுலகில் காண

1. 'எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்

குலதனமாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர்மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவல் பல்பழந் தீவும்’

2. 'செருவிற் சினவி இருப்பத் தொருகால் அரசுகளை கட்ட பரசு ராமன்

மேலவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும்.'

(S. I. I., Vol. V, No. 578)

3. சாந்திமத்தீவு என்பது அரபிக்கடலிலிருந்த ஒரு தீவாதல் வேண்டும்.

"

(Ins. 29 of 1923)