உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

என்று கலிங்கத்துப் பரணியிலும்

மும்முடி போய்க் கல்யாணி

செற்ற தனியாண்மைச் சேவகனும்'

183

என்று விக்கிரமசோழன் உலாவிலும் முறையே சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகிய இரு கவிஞர்பெருமான்களாலும் பாராட்டப் பெற்றிருத்தல் அறியற்பாலது.

சோழர்க்கும் மேலைச்சளுக்கியர்க்கும் நிகழ்ந்த போர்கள் எல்லாம் அடிக்கடி குந்தள இராச்சியத்திலேயே நடை பெற்றமையின் அந்நாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்க்கையின்றி அல்லலுறுவாராயினர். அன்றியும் அவ்விராச் சியத்தில் பல நகரங்கள் சோழரது படையெடுப்பினால் தம் செல்வமும் சீரும் இழந்து அழியும் நிலையை எய்தின. தம் குடிமக்களுக்கும் நகரங்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களைக் குந்தள நாட்டு வேந்தரும் குறுநில மன்னருங் கண்டு, பெருங் கவலை கொண்டு, மன முடைந்தன ரெனினும் அன்னோர் தம் இராச்சியத்தில் பெரும்பகுதியை இழந்து விடாமல் தம் ஆட்சிக்குள் வைத்துக்கொண்டிருந்தன ரென்பது அந்நாட்டில் காணப்படும் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

கி. பி. 1054-ம் ஆண்டில் இராசாதிராசன் தன் தம்பி இரண்டாம் இராசேந்திரனோடு மறுபடியும் மேலைச் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். கிருஷ்ணை யாற்றங் கரையிலுள்ள கொப்பத்தில்' இரு படைகளும் கைகலந்து கடும்போர் புரிந்தன. சளுக்கியர் பக்கத்தில் ஆகவமல்லனும் சோழர் பக்கத்தில் இராசாதிராசனும் படைத்தலைமை வகித்துப் போரை நடத்தினர். இராசாதிராசன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் போர்க் களத்திற்கு வராமல் பெரும்படையுடன் பாடி வீட்டில் தங்யிருந்தான். போர் எவ்வாறு முடியுமோ என்று இருபக்கத்தினரும் ஐயுறும் வகையில் அத்துணைக் கடுமையாக நடைபெற்றது. சளுக்கியப் படைகள் ஒரேமுகமாகத் திரண்டு

1.

வி. உலா, வரிகள் 37-38

2. `செப்பருந் தீர்த்தக் கொப்பத்து' என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலால் இது தீர்த்தச் சிறப்பு வாய்ந்த ஒரு தலமாதல் வேண்டும். (S. I. I., Vol. V, No. 644.)