உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 ஆகவமல்லி என்று பெயரிட்டும் இவன் திருப்பியனுப்பினன் என்பதேயாம். அந்நிகழ்ச்சி, மேலைச் சளுக்கியரோடு இராசாதிராசன் மூன்றாம் முறை நடத்திய போரில் நிகழ்ந்த செயல்களுள் ஒன்றாதல் வேண்டும். அவர்களோடு இவ்வேந்தன் இம்முறை நிகழ்த்திய போரில் வெற்றி எய்திய பின்னர், அன்னோரது தலைநகராகிய கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த அரண்மனையையும் இடித்து, தன் வெற்றிக்கு அடையாளமாக அந்நகரிலேயே வீராபிடேகஞ் செய்து கொண்டு விசயராசேந்திரன் என்னும் பட்டமும் புனைந்தனன். இச் செய்திகள் இராசாதிராசன் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. அன்றியும், இவனது பிற்காலக் கல்வெட்டு ஒன்றினாலும் இவை உறுதி எய்துகின்றன. கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள தாராசுரம் இராசராசேச்சுர முடையார் கோயிலில் வைக்கப்பெற்றுள்ள துவாரபாலர் படிமம் ஒன்றின் பீடத்தில் 'ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ விசயரசேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலர்' என்று வரையப் பெற்றுள்ள செய்தி இப்போர் நிகழ்ச்சிக்குச் சிறந்த சான்றாக இருத்தல் அறியத்தக்கது. எனவே இராசாதிராசன், மேலைச் சளுக்கியரது தலைநகராகிய கல்யாண புரத்தைக் கைப்பற்றி அங்கிருந்து கொணர்ந்த பொருள்களுள் அத் துவாரபாலரது படிமமும் ஒன்று என்பது தேற்றம். அதன் சிற்பவமைதி, சோழர் காலத்துத் தமிழ் நாட்டுப் படிமங்களோடு ஒத்தில்லாமல் வேறுபட்டிருத்தலால் அது மேலைச்சளுக்கிய நாட்டுப் படிமமேயாதல் வேண்டும். ஆகவே, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு கல்யாணபுரத்தில் போர்புரிந்து வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க.

இராசாதிராசன் குந்தள நாட்டின்மேல் மும்முறை படை யெடுத்துச் சென்று நிகழ்த்திய வீரச் செயல்கள் எல்லாம்,

கம்பிலிச்சயத் தம்ப நட்டதும்

கடியரண்கொள் கல்யாணர் கட்டறக்

கிம்புரிப்பணைர கிரியுகைத்தவன்

கிரிகளெட்டினும் புலி பொரித்ததும்'

1.

க. பரணி, பா. 26.