உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

181

போன்ற சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்னும் முத்துறைகளிலும் தன்பட்டத்து யானையை நீராட்டிச் சளுக்கியரின் வராக முத்திரை பொறிக்கப்பெற்ற வராகக் குன்றில் தன் புலி முத்திரையைப் பொறித்து அங்கு வெற்றித் தூணும்' நிறுவினான். அந்நாட்களில் சோழரின் படைவீரர்கள் தங்கியிருந்த பாசறையில் அன்னோரது நிலையை யுணருமாறு ஆகவமல்லன் அனுப்பிய ஒற்றர் சிலர் அவ்வீரர்கள்பால் அகப்பட்டுக் கொண்டனர். நம் இராசாதிராசன் அவர்களைக் கொல்லாமல் அன்னோர் மார்பில் ஆகவமல்லன் யாங்கணும் அஞ்சிப் புறங்காட்டி யோடினன் என்று தெளிவாக எழுதுவித்து, பிறகு அவர்களைத் துரத்தி விடும்படி செய்தான்.

அவ்வவமானத்தைப் பொறுக்காத ஆகவமல்லன் பெரும் படையுடன் வந்து இராசாதிராசனோடு மீண்டும் போர் தொடங் கினான். அப்போரில் சளுக்கியப் படைத்தலைவர் களாகிய நுளம்பன், காளிதாசன், சாமுண்டன், கொம்மையன், வில்லவ ராசன் என்போர் தோல்வியுற்றுப் புறங்காட்டி யோடினர்; கூர்ச்சர மன்னன் ஒருவன் கொல்லப்பட்டான்.2 இராசாதிராசன் பெருவெற்றி எய்தினான். அவ்வேந்தன் தன் பட்டத்து யானையை நீராட்டியதாகக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெற்ற சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்பன முறையே துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும் பேராறுகளாக இருத்தல்வேண்டும் என்று கருதப்படுகின்றன.

4

இனி, திருக்கழுக்குன்றத்திலுள்ள இராசாதிராசன் கல்வெட் டொன்றில் அப்போரில் நிகழ்ந்த வேறொரு நிகழ்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஃஅது, பகை வேந்தனாகிய ஆகவமல்லன் தன் பெற்கடை ஒருவனோடு வேறு இருவரையும் இராசாதி ராசன்பால் ஒரு செய்திதெரிவிக்குமாறு அனுப்பிய போது அவ்விருவருள் ஒருவனுக்கு ஐங்குடுமி வைப்பித்து ஆகவமல்லன் என்று பெயரிட்டும் மற்றவனுக்குப் பெண்ணுடை தரிப்பித்து

1. S. I. I., Vol. IV, No. 539; Ibid, Vol. VII, No. 1046.

"

2. அமைச்சன், (Ep. Ind., Vol. VII, p. 25.)

3.S. I. I., Vol. V, No. 465; Ep. Car., Vol. X. KI., 112 (b)

4. Ins. 224 of 1925; Ins. 245 of 1929.