உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அக் கண்டராதித்த ராசனே இராசாதிராச சோழனிடத்தில் தோல்வியுற்றோடிய கண்டர் தினகரனாக இருத்தல்கூடும் என்று வரலாற்று ஆராய்ச்சியில் வல்ல பேராசிரியர் ஒருவர் கருதுவது மிகப்பொருத்த முடையதேயாம்.

இனி, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு மூன்றாம் முறை நடத்திய போர் இவனது ஆட்சியின் முப்பதாம் ஆண்டுக் கல்வெட்டுக்களிலும் அதற்குப் பிற்பட்ட காலத்துக் கல்வெட்டுக் களிலும் காணப்படுகின்றது. ஆனால், அது பிச்சாண்டார் கோயிலிலுள்ள இவனது ஆட்சியின் 30-ம் ஆண்டுக் கல்வெட்டில் இல்லை. அம்மூன்றாம் சளுக்கியப் போர் ஒரே ஆண்டுக் கல்வெட்டில் சிலவற்றில் காணப்பட்டும் சிலவற்றில் காணப் படாமலும் இருத்தலால் அஃது அவ்வாண்டின் பிற்பகுதியில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அதில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறும் கல்வெட்டுக்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய செய்தியைக் கூறுகின்றன. அவற்றை நோக்கு மிடத்து, அப்போர் சில ஆண்டுகளாதல் தொடர்ந்து மிகக் கடுமையாக நடைபெற்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது. அது கி. பி. 1048-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, குந்தள இராச்சியத்தின்மீது அவ்வாண்டில் படையெடுத்துச் சென்ற இராசாதிராசன் கிருஷ்ணை யாற்றங்கரையிலுள்ள பூண்டூரில் மேலைச் சளுக்கியரோடு பெரும்போர் புரிந்து தெலுங்க விச்சையன், அத்திராசன், அக்கப்பையன், கொண்டைய ராஜன், முஞ்சன், தண்ட நாயகன் தனஞ்சயன், வீரமாணிக்கன் என்னுஞ் சளுக்கியத் தலைவர்களை வென்று விச்சையன் தாய் தந்தையரையும் எண்ணரும் மகளிரையும் சிறைபிடித்து, அந்நகரின் மதில்களையும் இடித்துப் பாழ்படுத்தினன்; அன்றியும், மண்ணதிப் பதியிலிருந்த மேலைச்சளுக்கியர் மாளிகையிலும் எரியூட்டி, அந்நகரில் வேங்கை வடிவம் பொறிக்கப்பெற்ற வெற்றித்தூண் ஒன்றும் நாட்டினான்; பிறகு, மேலைச்சளுக்கியர்க்குரிய கடல்

3

1. Ins. 41 of 1904 and Ins. 711 of 1919.

2. The Cholas, Vol. I. p. 305.

3. S. I. I., Vol. V, Nos. 520 and 641.