உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

179

மாத்திரம் ஈழ மன்னர் ஆளுகையில் இருந்து வந்தது என்பதும் அவர்கள் தம் நாடு முழுமையும் மீண்டுங் கைப்பற்றியாளு வதற்கு இடைவிடாது முயன்று சோழரோடு போர்புரிந்து வந்தனர் என்பதும் அங்ஙனம் நிகழ்ந்த போர்களில் அந்நாட்டு வேந்தர் சிலர் உயிர் துறக்க நேர்ந்தது என்பதும் நன்கு வெளியா கின்றன. சோழர் ஆட்சி ஈழ நாட்டில் நடைபெற்று வந்தமைக்கு அவர்கள் கல்வெட்டுக்களும் பொற்காசுகளும் அந்நாட்டில் காணப் படுகின்றமை சிறந்த சான்றாகும்.

1

இனி, இராசாதிராசன் மெய்க்கீர்த்தியில் சொல்லப்பட்ட வாறு மேலைச் சளுக்கியரோடு இவன் இரண்டாம் முறை நடத்திய போர் ஆராயற்பாலதாகும். அது கி.பி.1046-ல் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது இவனது ஆட்சியின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டால் புலனாகின்றது.' மேலைச் சளுக்கியர்களை முற்றிலும் வென்று அவர்களைத் தமக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னராகச் செய்தல் வேண்டும் என்பது சோழ மன்னர்களின் கருத்தாதலின் அவர்களுடைய குந்தளநாட்டின் மேல் அடிக்கடி படையெடுத்துச் சென்று பெரும் போர்கள் புரிந்து நாடு நகரங்களை அழித்து வருவா ராயினர். அத்தகைய போர் நிகழ்ச்சிகளுள் கி. பி. 1046-ல் நிகழ்ந்ததும் ஒன்றாகும். அப்போரில், கண்டர்தினகரன், நாரணன், கணபதி, மதுசூதனன் ஆகிய சளுக்கியத் தலைவர்கள் தம் வலியிழந்து புறங்காட்டி ஓடிவிட்டனர். பிறகு, பல்லாரி ஜில்லா ஹாஸ்பேட்டைத் தாலுகாவிலுள்ள கம்பிலி நகரத்திலிருந்த சளுக்கியரது மாளிகை தகர்த்தெறியப்பட்டு அங்கு இராசாதி ராசனால் வெற்றித்தூணும் நிறுவப்பட்டது.* இவ் வேந்தன் புரிந்த அப்போர், 'கம்பிலிச் சயத்தம்பம் நட்டதும்' என்று கலிங்கத்துப் பரணியில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.3 மகாமண்டலேசுவரன் கண்டராதித்தராசன் என்பவன் ஒருவன் ஆகவமல்லனுக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னனாகச் சிந்தவாடி நாட்டை ஆண்டு வந்தனன் என்பது பல்லாரி ஜில்லாவிற்

1. S. I. I., Vol. III, No. 28

2. Ibid, Vol. V, No. 978; Ibid, Vol. VIII, No.199.

3.

க. பரணி, இராசபாரம்பரியம், பா.26.