உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

185

ாடிய

வராகக்கொடியையும் சக்தியவ்வை, சாங்கப்பை முதலான கோப்பெருந்தேவியரையும் இராசேந்திரன் கைப்பற்றிக் கொண்டான்.' அன்றியும் சளுக்கியர் போர்க்களத்தில் விட்டே எண்ணிறந்த யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் பிற பொருள்களும் இராசேந்திரனுக்கு உரியனவாயின. பின்னர், சளுக்கியர் நகரமாகிய கொல்லாபுரத்தில் ஒரு வெற்றித்தூணும் நிறுவப்பட்டது. இரண்டாம் இராசேந்திரன், அப்போர்க் களத்திலே பார்த்திபரானோர் முன் செய்தறியாத தொன்றைத் தான்செய்யக் கருதிப் பகைஞர் அம்புகள் தைத்த புண்களி லிருந்து ஒழுகும் செந்நீரைப் புதுப்புனலால் நீக்கியதுபோல விசயாபிடேகஞ் செய்துகொண்டு சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்டான்.* பிறகு, போரிற் கிடைத்த பல்வகைப் பொருள்களுடன் வெற்றி வேந்தனாய்த் தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து சேர்ந்தான். கொப்பத்துப் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசாதிராசன் தம்பியாகிய ரண்டாம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இனி, அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஆகவமல்லன் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. அவன் தன் பகைஞராகிய சோழரால் தானும் தன் நாடும் அடைந்த பரிபவங்களைத் தன் நாட்டுக் கல்வெட்டுக்களில் எங்ஙனம் பொறித்து வைத் திருத்தல் கூடும்? அவ்வாறு செய்வது அவன் பெருமைக்கும் புகழுக்கும் இழுக்கைத் தருமன்றோ? அதுபற்றியே அவன் கல்வெட்டுக்களில் கொப்பத்துப் போர் நிகழ்ச்சிகள் காணப் படவில்லை எனலாம். ஆயினும், ஆகவமல்லன் இறந்த பிறகு கி. பி. 1071-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற மேலைச் சளுக்கியர் கல்வெட்டுக்கள் இரண்டில் அப்போர் நிகழ்ச்சிகளுள் சில, குறிப்பாகக் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் தமிழ் வேந்தனாகிய பாண்டிய சோழன் என்பான், தன் முன்னோர் கைக்கொண்ட உயர்ந்த முறைகட்கு முரணாக பெள்வோலா நாட்டிற் பெரும்

1. S. I. I., Vol. V, No. 644.

2. Ibid, No. 647.

3. Belvoly.