உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 படையுடன் புகுந்து சைன கோயில்கள் உள்ளிட்ட பலவற்றையும் எரியூட்டி அழித்தான் என்றும் அத்தீச்செயல் காரணமாக ஆகவமல்லனால் போரிற் கொல்லப்பட்டானென்றும் குறிக்கப் பட்டிருக்கின்றன. அக்கல்வெட்டுக்கள் கொப்பத்துப் போர் நிகழ்ச்சிக்குச் சில ஆண்டுகட்குப் பின்னர் வரையப் பெற்றவையாகும்.

1

ஆயினும், அவற்றில் போரில் உயிர் துறந்ததாகக் கூறப்பட்ட பாண்டிய சோழன் இராசாதிராசனாக இருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரப்படுகின்றன. எனவே, சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் குந்தள நாட்டுப் போர்ச் செய்திகளுள் சில, மேலைச்சளுக்கியர் கல்வெட்டுக் களாலும் உறுதி எய்துதல் காண்க.

2

இராசாதிராசன் போர்க்களத்தில் யானைமீதிருந்து உயிர் துறந்தமைபற்றிக் 'கல்யாணபுரமுங் கொல்லாபுரமும் எறிந்து யானைமேற்றுஞ்சின உடையார் விஜயராசேந்திர தேவர்' என்று சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தல் அறியற்பாலதாகும். அன்றியும், இவன் போர்க்களத்தில் உயிர் நீத்த செய்தி இவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டிலும் காணப்படுகின்றது. இவன் இளமைப்பருவம் முதல் பெரு வீரனாகவே விளங்கினான். இளவரசனாயிருந்த காலத்தில் புறநாடுகள் பலவற்றின் மேல் படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் தந்தையின் ஆட்சிக்குள்ளாக்கிய செயல் ஒன்றே, இவன் ஆற்றலை இனிது புலப்படுத்தா நிற்கும். இவனது வாழ்க்கையே வீரம் நிரம்பிய ஒரு தனிவாழ்க்கை எனலாம். இவன், போர்க்களத்திலேயே தன் வாணாளின் இறுதியையும் எய்திப் புகழ் கொண்டமை குறிப்பிடத்தக்க தொன்றாம்.

இனி, இவன் மேலைச்சளுக்கியரது போர்க்களத்தில் வாகை சூடி அவர்களுடைய தலைநகராகிய கல்யாணபுரத்தில் வீராபிடேகஞ் செய்து கொண்டு விசயராசேந்திரன் என்னும் பட்டம் புனைந்து கொண்டமை முன்னர் விளக்கப்பட்டது.

1. Ep. Ind., Vol, XV, No. 23; Ep. Car., Vol. VIII, Sorab 325.

2. S. I. I., Vol. V, No. 647.