உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

199

சோழன், இரட்டபாடி கொண்ட சோழன் என்போர் அவ்வறு வர்க்கும் இவன் உத்தம சோழன் முதலான பட்டங்கள் வழங்கி யுள்ளனன்.' இவனுக்கு மதுராந்தக சோழன், நிருபேந்திர சோழன் என்னும் இரு பேரன்மார்களும் இருந்தனர்.

'

வனுடைய மகள் மதுராந்தகி என்பாள். அவள் கீழைச் சளுக்கிய மன்னனாகிய இராசராச நரேந்திரன் மகனும் கங்கை கொண்ட சோழன் மகள் வயிற்றுப் பேரனுமாகிய இராசேந்திரனுக்கு மணஞ்செய்து கொடுக்கப்பெற்றாள். அவ்வீரராசேந்திரனே பிறகு சோழ இராச்சியத்தில் அரசாண்ட முதற் குலோத்துங்க சோழன் என்பது உணரற்பாலது."

4

இனி, இவ்விரண்டாம் இராசேந்திரன், நாடகம் முதலான கலைகளிற் பெரும் பற்றுடையவன் என்பதும், தன் முன்னோர் களிடத்தில் அன்பும் மரியாதையும் உடையவன் என்பதும் தஞ்சை இராசராசேச்சுர நாடகம் நடித்தற்கு ஆண்டு ஒன்றிற்கு 120 கலநெல் நிவந்தமாக வன் அளித்துள்ளமையால் நன்கறியக்கிடக்கின்றன.

5

இவன் ஆட்சியின் 12-ம் ஆண்டுக்கல்வெட்டொன்று மைசூர் இராச்சியத்தில் உளது. அவ்வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமையின் கி.பி. 1063-ல் இறந்தனன் என்பது திண்ணம்.

வன்

இனி, ராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து இவன் ஆட்சியில் அரசியல் அதிகாரிகளாகவும் குறுநிலமன்னராகவும் இருந்தவர் பெயர்கள் தெளிவாகப் புலப்படுகின்றன. ஆனால் அவர்களைப் பற்றிய வரலாற்றை

1. S. I. I., Vol. V, No. 644.

2. இவன் தன் உடன்பிறந்தார்க்கும் மக்கட்கும் வழங்கியுள்ள பட்டங்கள் பல. அவற்றுள், சோழபாண்டியன், சோழகேரளன், சோழகங்கன் என்னும் பட்டம் பெற்றவர்கள் பாண்டிய கேரள கங்கநாடுகளுக்கு அரசப்பிரதிநிதிகளாக இருந்து அவற்றை ஆட்சி புரிந்தோர் ஆவர். சோழ அயோத்தியராசன், சோழ கன்னக்குச்சியன் முதலான பட்டம் பெற்றவர்கள் அவற்றைக் கௌரவப் பட்டங்களாகப் பெற்றவராதல் வேண்டும்.

3.S.I.I.,Vol. V, No. 489.

4. Ep. Ind., Vol. V, Chellur Plates, Verses 11 and 12.

5. S. I. I., Vol II, No. 67.

6. Ep. Car., Vol. IV, Hg. 115.