உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

14. வீரராசேந்திரசோழன்

கி.பி.1063-1070

வ்வரசரேறும் கங்கைகொண்ட சோழனுடைய புதல்வர் களுள் ஒருவன். இவன் அவ்வேந்தர் பெருமானுடைய மனைவி மார்களுள் யாருடைய மகன் என்பது புலப்படவில்லை. செங்கற் பட்டு ஜில்லா திருமுக்கூடலிலுள்ள கல்வெட்டொன்றில் காணப்படும் 'ஸ்ரீவீர ராஜேந்திர தேவர் ஆட்டைத் திருநாள் ஆவணித் திங்கள் திருவாயிலியத்தில்" என்ற சொற்றொடர் களால் இம்மன்னன் ஆவணித்திங்கள் ஆயிலிய நாளிற் பிறந்தவன் என்பது நன்கறியக்கிடக்கின்றது. திருவெண்காட்டில் திங்கள் தோறும் ஆயிலிய நாளில் இறைவன் திருமஞ்சனமாடித் திருவிழா எழுந்தருளுவதற்கு இவன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் நிவந்தம் விடப்பெற் றிருப்பதும் அதற்குச் சான்றாதல் காண்க. அன்றியும், திருவொற்றியூர்க் கோயிலில் ஆயிலிய நாளில் சிறப்புவிழா ஒன்று நடத்துவதற்கு இவன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய சயசிங்க குலகால விழுப்பரையன் என்பவன் ஏற்பாடு செய்திருப்பதும் அச்செய்தியை வலியுறுத்தி நிற்றல் அறியத்தக்கது.

செங்கற்பட்டு ஜில்லா யோகி மல்லவரத்திலுள்ள கல்வெட்டொன்று இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய சகம் 991-ல் வரையப்பெற்றுள்ளது" அன்றியும், சித்தூர் ஜில்லா சாரால என்னும் ஊரில் கிடைத்த செப்பேடுகளிலும் இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய சகம் 991-ல் இவன் பெருங்கொடை வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது. 5 1. Ep. Ind., Vol. XXI, No. 38.

2. S. I. I., Vol. V, No. 976.

9

3. Ins. 136 of 1912.

4. Ins. 273 of 1904.

5. Ep. Ind., Vol. XXV, No. 25.