உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

தன்னுடன் பிறந்த முன்னவர் விரதமுடித்து

வந்து பணிந்த விஜயாதித்தர்க்கு மண்டலமருளிக் கழலடைந்த மன்னர்க்குக் கடாரமெறிந்து கொடுத்தருளிச் சோமேசுவரனைக் கன்னடதேசங் கைவிடத் துரத்தித் தன்னடியடைந்த சளுக்கி விக்கிரமாதித்தனை எண்டிசை நிகழக் கண்டிகை கட்டி

இரட்டபாடி ஏழரை இலக்கமும் எறிந்துகொடுத்தருளி

விஜய சிம்மாசனத்து உலகமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளின சக்கரவரர்த்திகள்

ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்'

என்பதாம்.

இச்சிறு மெய்க்கீர்த்தி, பயன்படாப் புனைந்துரைகளின்றி இவன் வரலாற்றுண்மைகளை விளக்கிச் செல்லும் நிலையில் அமைந்துள்ளமை காண்க.

வனது

இவ்வேந்தன் தன்னுடன் பிறந்த முன்னவர்போல் பேராற்றல் படைத்த பெருவீரனாயிருந்தமையால் ஆட்சிக்காலம் முழுவதும் போரிலேயே கழிந்தது. இவன் தன் தமையன்மார் கொண்ட விரதத்தைத் தன் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிவிட்டதாகத் தன் கல்வெட்டுகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றியும் இவன் 'ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்டு* என்று தன் கல்வெட்டுகளில் வரைந்திருப்பதால், மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனை இவன் போரில் ஐந்துமுறை வென்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப் படும். ஆகவே, இவன் முடிசூடிய பிறகு கி. பி. 1063-ஆம் கி.பி. ஆண்டில் மறுபடியும் மேலைச்சளுக்கியப்போர் தொடங்கி யிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

குந்தள வேந்தனாகிய ஆகவமல்லன் தன் இரண்டாம் புதல்வனாகிய விக்கிரமாதித்தன் சோழ இராச்சியத்தின் எல்லையில் வனவாசி, நுளம்பபாடி என்பனவற்றின் வடபகுதியில் இருந்து கொண்டு, தன்னுடைய இராச்சியத்தின் தென்பகுதியைக்

1. Charala Plates of Virarajendra Deva, Ep. Ind., Vol. XXV p. 263.

2. S. I. I., Vol, VII, No. 887.