உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

207

மதுவணனும் அரச குமாரர்களாகிய விக்கிரமாதித்தன், சயசிங்கன் என்பவர்களும் மேலைச்சளுக்கிய வேந்தனாகிய ஆகவமல்லனும் எதிர்த்துப் போர் புரிய முடியாமல் புறங் காட்டி ஓடிவிட்டனர். வீரராசேந்திரன் பெரு வெற்றி எய்தி ஆகவமல்லனுடைய பாசறையை முற்றுகையிட்டு, அவன் மனைவியரையும் பட்டத்து யானையாகிய புட்பகப்பிடியையும் வராகக் கொடியையும் யானை குதிரைகளையும் மற்றும் பல பொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு, வெற்றி வேந்தனாய்த் தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தை யடைந்து, அங்கு வெற்றி முடி சூடி விசயாபிடேகம் செய்து கொண்டான்.1

இவ்வேந்தன் ஆகவமல்லனோடு போர்புரிந்து அடைந்த வெற்றிகளுள் கூடல் சங்கமத்தில் பெற்ற வெற்றியே மிகச் சிறந்ததாகும். சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர் பெருமக்கள் இவனைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் இவனது கூடல் சங்கமத்து வெற்றியையே குறிப்பிட்டுப் புகழ்ந் திருத்தலால் அவ்வுண்மையை நன்குணரலாம். அதனை,

குந்தளரைக் கூடல் சங்கமத்து வென்ற கோனபயன்? என்னும் கலிங்கத்துப்பரணிப் பாடலாலும்

சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும்’

'3

என்னும் விக்கிரமசோழன் உலாவினாலும்,

‘பாடவரிய பரணி பகட்டணிவீழ்

கூடலார் சங்கமத்துக் கொண்டகோன் 4

என்னும் இராசராசசோழன் கொள்ளலாம்.

1. Ep. Ind., Vol. XXI, No. 38.

2. கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம், பா.29.

3. விக்கிரமசோழன் உலா, வரிகள், 42-44.

4. இராசராசசோழன் உலா, வரிகள், 49-50.

-கூடலார்

உலாவினாலும் அறிந்து