உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

ம்

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

1

இனி, நம் வீரராசேந்திரன் ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் இவன் பொத்தப்பி வேந்தனையும் கேரளனையும் ஜனநாதன் தம்பியையும் பாண்டியன் சீவல்லவன் மகன் வீரகேசரியையும் போரில் கொன்றான் என்று கூறு கின்றன. எனவே, அந்நிகழ்ச்சிகள் கி. பி. 1065-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அவ்வரசர்களைப் பற்றி இப்போது ஒன்றும் புலப்படவில்லை. வீரராசேந்திரன் கல்வெட்டுக்கள் கன்னியாகுமரியிலும் பாண்டிய நாட்டிலுள்ள ஆற்றூர், திருப்பத்தூர் முதலான ஊர்களிலும் காணப்படுகின்றன.3 அன்றியும், இவன் தன் புதல்வன் கங்கைகொண்ட சோழன் என்பவனைச் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் கி. பி. 1064-ல் பாண்டி நாட்டில் அரசப்பிரதிநிதியாக அமர்த்தினான் என்று திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று உணர்த்து கின்றது. இந்நிலையில் இவன் பாண்டியனோடு போர் தொடுத் தமைக்குக் காரணம் தெரியவில்லை. அரசப் பிரதிநிதியாயிருந்த தன் புதல்வனுக்கு அடங்காமல் உள் நாட்டில் குழப்பமும் கலகமும் உண்டுபண்ணிக் கொண்டிருந்தமை பற்றி இவன் பாண்டி நாட்டிற்குச் சென்று அவ்வீரகேசரியைப் போரில் கொன்றிருத்தல் கூடும்.' கி. பி. 1066-ஆம் ஆண்டில் இவன் சேர நாட்டிலுள்ள உதகைமீது படையெடுத்துச் சென்றபோது சேர மன்னர்கள் எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் பெரிதும் அஞ்சி ஓடி யொளிந்தனர் என்றும், பின்னர் அவர்கள் கப்பமாக அளித்த யானைகளையும் பிறபொருள்களையும் பெற்றுக் கொண்டு திரும்பினான் என்றும் செங்கற்பட்டு ஜில்லா மணிமங்கலத்திலுள்ள ஒரு கல்வெட்டும், திருமுக்கூடலிலுள்ள ஒரு கல்வெட்டும் உணர்த்துகின்றன. அவ்வாறு அச்சமுற்று

1.

4

ம்

S. I. I., Vol. 3 No. 20; Ep. Car., Vol. IX, cp. 85. பொத்தப்பிநாடு தொண்டை மண்டலத்திற்கு வடக்கே கடப்பை ஜில்லாவிலிருந்த ஒரு நாடு. அந்நாட்டு வேந்தன் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியவில்லை.

2.Ins. 400 of 1930.

3. Ins. 401 of 1930.

4. S. I. I. Vol. V, No. 976.

5. Ibid, Vol. III, No. 30.

6. Ep. Ind., Vol. XXI, No. 38.