உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




234

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 காணப்படும் தொடர்மொழியினைக் கொண்டே அக்கல்வெட்டு ன்ன வேந்தன் காலத்தது என்பதை எளிதாய் அறிந்து காள்ளலாம். ஆகவே, வரலாற்றாராய்ச்சிக்குப் பல்வகை யாலும் பயன்படுவதும் பண்டைத் தமிழ் வேந்தர்களின் பேரும் புகழும் என்றும் நிலைபெறும்படி செய்வதும் ஆகிய மெய்க் கீர்த்தியைத் தன் கல்வெட்டுக்களில் முதலில் அமைத்து நம் நாட்டிற்கு நலம் புரிந்துள்ள முதல் இராசராச சோழனது பேரறிவுடைமை அளவிட்டுரைக்குந் தரத்ததன்று. அவன் முன்னோர்கள், தம் பெயர்களுக்கு முன்னர்க் கல்வெட்டுக்களில் பொறித்துவந்த வீரச் செயல்களைக் கூறும் அடைமொழிகளும் அவன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் வென்றடிப்படுத்திய சேர நாட்டிற் கிடைத்த பதிற்றுப்பத்து என்னும் நூலில் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் காணப்படும் பண்டைச் சேர மன்னர் களின் மெய்க்கீர்த்திகளாகிய பதிகங்களும் இத்தகைய மெய்க் கீர்த்தி யொன்று அமைக்கும் எண்ணத்தை அவன் உள்ளத்தில் தோற்றுவித்தனவாதல் வேண்டும். அவ்வெண்ணமும் கி. பி. 993-ம் ஆண்டில் நிறைவேறியது. அவ்வாண்டிலேயே அவ்வரசர் பெருமான் கல்வெட்டுக்களில் 'திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் - தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொள' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியும் தோன்றுவதாயிற்று. இராசராசன் தன் வழித்தோன்றல்கள் தான் செய்த வீரச்செயல்களை யுணரு முகத்தால் சோழர் பேரரசை என்றும் நின்றுநிலவச் செய்தற்குரிய ஆற்றலும் ஊக்கமும் உடையராதல் வேண்டும் என்ற விருப்பத்தினாலேயே தன் மெய்க்கீர்த்தியைக் கல்வெட்டு களிற் பொறித்தனனாதல் வேண்டும். அவன் கருதியவாறே அவனுக்குப் பின்வந்த சோழ மன்னர்களும், பேராற்றலும் பெருவீரமுமுடையவர்களாய் வெளி நாடுகளையும் வென் றடக்கிச் சோழர் பேரரசைப் பேணிவந்தமை அவர்களுடைய கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது.

நம் இராசராசனுக்குத் 'திருமகள் போல' என்று தொடங்கும் இந்த ஒரே மெய்க்கீர்த்திதான் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. சில சோழ மன்னர்கட்கு ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க்கீர்த்தி களும் கல்வெட்டுகளில் வரையப்பெற்றுள்ளன. தமிழ் வளம்